விஜய்யின் வாரிசு ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்... அமேசான் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் கன்ஃபார்ம்!
சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.
முன்னதாக அவர் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் திரையரங்குகளில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாரிசு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தற்போது அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய்யின் டபுள் ட்ரீட்
விஜய் ரசிகர்களுக்கு இந்தாண்டு டபுள் ட்ரீட் என உறுதியாகக் கூறலாம். பொங்கல் ஸ்பெஷலாக வம்ஷி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு வெளியானது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், ஃபேமிலி சென்டிமெண்டலுடன் பக்கா கமர்சியலாக வெளியானது. விஜய்யின் வழக்கமான மேனரிசமும் ஸ்டைலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

வாரிசு ஓடிடி ரிலீஸ் அப்டேட்
வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான வாரிசு படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். வாரிசு ரிலீஸான அதே தேதியில், அஜித்தின் துணிவும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது வாரிசு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஓடிடி ரசிகர்கள் வெயிட்டிங்
திரையரங்குகளில் குடும்பங்கள் கொண்டாடிய விஜய்யின் வாரிசு படத்துக்கு, ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்தப் படம் வரும் 22ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வாரிசு படத்தை பார்க்க முடியாமல் போன ரசிகர்கள், ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஓடிடியில் சாதனை படைக்குமா?
திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் வாரிசு திரைப்படம் சாதனை படைக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 22ம் தேதி புதன்கிழமை வெளியாகும் இந்தப் படம் அடுத்த வாரம் விடுமுறைக்கு ஃபேமிலி ஆடியன்ஸின் முதல் சாய்ஸாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்தின் துணிவு கடந்த 8ம் தேதியே நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. அன்று முதல் தற்போது வரை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ரசிகர்களிடம் ட்ரெண்டிங்கில் உள்ளது துணிவு. அதேபோல், விஜய்யின் வாரிசு திரைப்படமும் ஸ்ட்ரீமிங்கில் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.

லியோ ஷூட்டிங்கில் விஜய்
பீஸ்ட் படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்களை வாரிசு வெற்றி மூலம் காம்ப்ரமைஸ் செய்துவிட்டார் விஜய். மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் வாரிசு தரமான கலெக்ஷன் செய்துள்ளது. இதனால் விஜய்யின் லியோ படம் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறிப்போயுள்ளது. முக்கியமாக லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்குவது ரசிகர்களுக்கு இன்னும் எதிர்பார்க்க வைத்துள்ளது. ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாகும் லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











