வாரே வா.. வாரிசு படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு போயிருக்கா.. சாட்டிலைட் உரிமம் யாருக்கு?

சென்னை: விஜய்யின் வாரிசு படத்தின் ஹாட் அப்டேட்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே ஆரம்பித்து விட்டன.

படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்ததும் முதல் பாடல், டீசர் என வரும் நவம்பர் மாதம் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட விருந்து காத்துக் கொண்டிருக்கிறது என இயக்குநர் வம்சியே பேட்டியில் சொல்லி விட்டார்.

இந்நிலையில், வாரிசு படத்தின் டிஜிட்டல் உரிமத்தை எந்த ஓடிடி நிறுவனம் கைப்பற்றியது என்பது குறித்தும் சாட்டிலைட் உரிமத்தை எந்த நிறுவனம் கைப்பற்றியது போன்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாரிசு பொங்கல்

வாரிசு பொங்கல்

வரும் பொங்கல் பண்டிகை விஜய் ரசிகர்களுக்கு வாரிசு பொங்கலாகவே இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் வாரிசு என தமிழிலும், வாரிசுடு என தெலுங்கிலும் வெளியானாலும், இது முழுக்க முழுக்க தமிழ்ப்படம் தான் என விஜய்யும் வம்சியும் சொல்லி வருகின்றனர்.

வாரிசு ஸ்டில்ஸ்

வாரிசு ஸ்டில்ஸ்

வாரிசு படத்தின் பிரத்யேக புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு என்ன நண்பா ஹேப்பியா என ட்வீட் போட்டுள்ள நிலையில், அந்த ரஞ்சிதமே பாடலை முதலில் போட்டு விடுங்க ரொம்ப ஹேப்பி ஆகிடுவோம் என ரசிகர்கள் பதிலுக்கு கமெண்ட் போட்டு தயாரிப்பு நிறுவனத்தை திணறடித்து வருகின்றனர்.

ப்ரீ ரிலீஸ் பிசினஸ்

ப்ரீ ரிலீஸ் பிசினஸ்

விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஷாம், சங்கீதா, பிக் பாஸ் சம்யுக்தா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள வாரிசு படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸே 250 கோடிக்கு சென்று விட்டதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகி உள்ளன. மேலும், பாடல்களின் ஆடியோ ரைட்ஸ் மட்டும் 10 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளதாகவும் கூறுகின்றனர்.

150 கோடிக்கு வாங்கிய அமேசான்

150 கோடிக்கு வாங்கிய அமேசான்

வாரிசு படத்தின் போஸ்ட் தியேட்டரிக்கல் உரிமத்தை அனைத்து மொழிகளையும் சேர்த்து 150 கோடிக்கு அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் வாங்கி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 120 கோடிக்கு டிஜிட்டல் உரிமம் விற்பனையான நிலையில், வாரிசு படத்தின் விற்பனை அதிகரித்துள்ளது என்கின்றனர்.

சன் டிவி

சன் டிவி

நடிகர் விஜய் படங்களை தொடர்ந்து அதிக தொகைக்கு வாங்கி வெளியிட்டு வரும் சன் டிவியே இந்த முறையும் வாரிசு படத்தை பெரும் தொகைக்கு வாங்கி உள்ளதாக கூறுகின்றனர். பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்த நிலையில், வாரிசு படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றி உள்ளது. மீண்டும் விஜய் உடன் இணைந்து ஒரு படத்தை பண்ணவும் சன் பிக்சர்ஸ் தயாராக இருக்கிறதாம்.

துணிவு தாண்டுமா

துணிவு தாண்டுமா

விஜய்யின் வாரிசு படத்துடன் வரும் பொங்கல் ரேஸில் மோத தயாராகி உள்ள அஜித்தின் துணிவு படத்தின் டிஜிட்டல் உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் வாரிசு படத்தின் விற்பனையை விட அதிக விலைக்கு போகுமா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், வாரிசு படத்தை விட துணிவு படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் கொஞ்சம் கம்மியான தொகைக்குத் தான் விற்பனையாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X