அமேசானில் வெளியான வாரிசு படம்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த மாதம் 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசானது.

விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்திருந்தது.

குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் விஜய் படத்திற்கே உரிய காமெடி, ஆக்ஷன் என கலந்துக்கட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.

விஜய்யின் வாரிசு படம்

விஜய்யின் வாரிசு படம்

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது வாரிசு படம். தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் ரிலீசான இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கியிருந்தார்.

குடும்ப சென்டிமெண்ட்

குடும்ப சென்டிமெண்ட்

குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு உருவாகியிருந்த வாரிசு படத்தில் விஜய் படங்களுக்கேயுரிய ஆக்ஷன், காமெடி, இசை, டான்ஸ் என கலந்துக்கட்டி கொடுத்திருந்தார் வம்சி. படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் 300 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு அப்டேட் தெரிவித்தது.

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்

படத்தில் தமன் இசையில் பாடல்கள் அனைத்து ரசிகர்களை கவரும் வகையில் அமைந்தது. விஜய்க்கு ஈடுகொடுத்து டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களை ராஷ்மிகா கொடுத்திருந்தார். உயிரிழக்கும் தருவாயில் தன்னுடைய தந்தையின் இறுதி ஆசையை சிறப்பாக எதிர்கொண்டு, அதை வெற்றிகரமாக முடிக்கும் மகனாக இந்தப் படத்தில் விஜய் நடித்திருந்தார்.

விமர்சனங்களை சந்தித்த வம்சி

விமர்சனங்களை சந்தித்த வம்சி

விஜய்யை நீண்ட நாட்களுக்கு பிறகு பேமிலி சென்டிமெண்ட் கதையில் பார்க்க அவரது ரசிகர்களும் மிகுந்த ஆர்வம் காட்டினர். படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி, படத்தின் ரிலீசையடுத்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்த நிலையில், ஒரு மாஸ் ஹீரோவின் படத்தை இயக்குவது ஜோக் இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஓடிடியில் வெளியான வாரிசு

ஓடிடியில் வெளியான வாரிசு

இந்தப் படத்தின் கூட்டணி, சிறப்பாக அமைந்த நிலையில், மீண்டும் அடுத்த படத்திற்காக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தற்போது இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் இன்று முதல் சர்வதேச அளவில் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

 4 மொழிகளில் வெளியானது

4 மொழிகளில் வெளியானது

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படத்தை ரசிகர்களால் பார்க்க முடியும். இந்நிலையில், இந்தியா அல்லாமல் மற்ற நாடுகளில் சன் நெக்ஸ்ட் மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய தளங்களில் இந்தப் படத்தை பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X