மக்கள் செல்வனை மனசார பாராட்டும் பாலிவுட் ரசிகர்கள்.. டிரெண்டாகும் ஹாஷ்டேக்.. வேறலெவல் விஜய்சேதுபதி!

சென்னை: ராஜ் - டிகே இயக்கத்தில் சமந்தா நடித்த வெப்சீரிஸில் சமந்தாவுக்கு எந்தளவுக்கு பாலிவுட்டில் வரவேற்பு கிடைத்ததோ அதை விட அதிகமாகவே ஃபர்ஸி வெப்சீரிஸ் மூலம் விஜய்சேதுபதிக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

துணை நடிகராக, குறும்பட நடிகராக நடித்து சின்ன பட்ஜெட் படங்களில் நாயகனாக உருவான விஜய்சேதுபதி தனது அபார நடிப்பால் ஆல் இந்தியா நடிகராக மாறி உள்ளார்.

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கில் நடிக்க ஆரம்பித்த விஜய்சேதுபதி, தற்போது பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

வெயிட்டு காட்டும் விஜய்சேதுபதி

வெயிட்டு காட்டும் விஜய்சேதுபதி

மக்கள் திலகம் என தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜய்சேதுபதி, சிறந்த நடிகர் என பாலிவுட் ரசிகர்களாலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறார். ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான ஃபர்ஸி வெப்சீரிஸ் மூலம் சர்வதேச ரசிகர்களையும் தனது நடிப்பால் கவர்ந்துள்ளார் விஜய்சேதுபதி.

நவாஸுதின் சித்திக்கை தாண்டி

நவாஸுதின் சித்திக்கை தாண்டி

பாலிவுட் நடிகர்கள் நடித்து நெட்பிளிக்ஸில் வெளியான சேக்ரட் கேம்ஸ், ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் நடித்து அசத்திய பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக்கை மிஞ்சும் அளவுக்கு விஜய்சேதுபதி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார் என பாலிவுட் ரசிகர்கள் #VijaySethupathi ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஷாகித் கபூர் கும்பிடணும்

ஷாகித் கபூர் கும்பிடணும்

15 படங்கள் தொடர்ந்து பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் தோல்வியடைந்த நிலையில், விஜய்சேதுபதியின் நடிப்பால் ஃபர்ஸி வெப்சீரிஸ் ஹிட் அடித்துள்ளது. விஜய்சேதுபதி மற்றும் கேகே மேனன் புகைப்படங்களை வீட்டில் மாட்டி ஷாகித் கபூர் கும்பிடணும் என பாலிவுட் ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர். அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான கபிர் சிங் மட்டும் ஷாகித் கபூருக்கு இடையே ஹிட் கொடுத்ததாக அவரது ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

செல்லம் சார்

செல்லம் சார்

தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் சர்ப்ரைஸ் இணைப்பாக வந்து ரசிகர்களை கவர்ந்த செல்லம் சார் உடன் விஜய்சேதுபதி போனில் பேசும் காட்சிகள் ஃபர்ஸி மற்றும் ஃபேமிலிமேனை கனெக்ட் செய்யும் யூனிவர்ஸாக மாறி விட்டது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய்சேதுபதி கெத்து

விஜய்சேதுபதி கெத்து

மைக்கேல் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி காவல் அதிகாரியாக வரும் காட்சிகள் எல்லாம் அவரது ஸ்டைலான நடிப்பால் சும்மா கெத்துக் காட்டுகிறார். இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே மீண்டும் அவர்கள் இருவரும் வெப்சீரிஸ் வெற்றியாளர்கள் என்பதை அடித்துச் சொல்கிறது என பாராட்டுக்கள் பறக்கின்றன.

தேங்யூ நமஸ்தே ஜெய்ஹிந்த்

தேங்யூ நமஸ்தே ஜெய்ஹிந்த்

ஃபர்ஸி வெப்சீரிஸில் விஜய்சேதுபதி பேசும் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அதிலும், தேங்யூ நமஸ்தே ஜெய்ஹிந்த் வசனத்தை ஏகப்பட்ட ரசிகர்கள் வரிசையாக போட்டு விஜய்சேதுபதியை கொண்டாடி வருகின்றனர்.

ஷாருக்கானுக்கு வில்லன்

ஷாருக்கானுக்கு வில்லன்

கத்ரீனா கைஃப் உடன் மெர்ரி கிறிஸ்துமஸ், ஷாருக்கானுக்கு வில்லனாக அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்திலும் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதிக்கு ரெட்கார்ப்பெட் வரவேற்பை பாலிவுட் ரசிகர்கள் கொடுத்து வரவேற்றுள்ளது விஜய்சேதுபதி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X