மனுஷன் தூங்குவாரா இல்லையா? அடுத்த மாசம் 3 படம் ரிலீசாகுதே; இதோ அனபெல் சேதுபதி ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை: ஒடிடிக்கு ஒரு படம் தியேட்டருக்கு ஒரு படம் டிவிக்கு ஒரு படம் என அடுத்த மாதம் விஜய்சேதுபதியின் 3 படங்கள் வரிசையாக வெளியாக உள்ளன.
ஒடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தைத் தொடர்ந்து விஜய்சேதுபதி மற்றும் டாப்சி நடிப்பில் உருவாகி உள்ள அனபெல் சேதுபதி படம் அடுத்த மதம் வெளியாகிறது.
அதன் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய்சேதுபதி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தியேட்டரில் லாபம்
மறைந்த இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் கம்யூனிச சித்தாந்தங்களுடன் உருவாகி உள்ள லாபம் திரைப்படம் எந்தவொரு ஒடிடி லாபத்தையும் எதிர்பார்க்காமல் நேரடியாக திரையரங்குகளில் வரும் செப்டம்பர் 9ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

டிவியில் துக்ளக் தர்பார்
உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என போட்டு புதிய படங்களை ரிலீஸ் செய்து வந்த சன் டிவி உலக திரையரங்குகளில் கூட ரிலீஸ் ஆகாமல் நேரடியாக சன் டிவியில் என வரும் விநாயகர் சதுர்த்திக்கு துக்ளக் தர்பார் திரைப்படத்தை டிவியில் வெளியிட காத்திருக்கிறது.

ஒடிடிக்கு ஒரு படம்
தியேட்டர் மற்றும் டிவிக்கு அடுத்த மாதம் ஒவ்வொரு படங்களை ரிலீஸ் செய்யும் விஜய்சேதுபதி ஒடிடி மட்டும் பாவமில்லையா? அதிலும் ஒரு படத்தை வெளியிடுவோமே என அனபெல் சேதுபதி படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடுகிறார். அதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

எப்போ ரிலீஸ்
வரும் செப்டம்பர் 17ம் தேதி அனபெல் சேதுபதி திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. விஜய்சேதுபதி உடன் இந்த படத்தில் நடிகை டாப்சி இணைந்து நடித்துள்ளார். மேலும், நடிகை ராதிகா, யோகி பாபு, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை தீபக் சுந்தர்ராஜன் இயக்கி உள்ளார்.

பிரத்யேக ஸ்டில்கள்
நடிகர் விஜய்சேதுபதி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதற்கு முன்பாகவே ஏகப்பட்ட பிரத்யேக ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி விட்டன. காமெடி பேய் படமாக உருவாகி உள்ள இந்த படம் நிச்சயம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைட்டிலிலேயே சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதி ஏற்கனவே சேதுபதி எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டினார். இந்நிலையில், மீண்டும் அவர் பெயர் கொண்ட படமாக அனபெல் சேதுபதி என்கிற அசத்தலான டைட்டிலில் இந்த படம் உருவாகி உள்ளது மக்கள் செல்வன் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.

மனுஷன் தூங்குவாரா
ஒரு பக்கம் கமல்ஹாசனின் விக்ரம் காரைக்குடியில் நடக்குது, இன்னொரு பக்கம் பாண்டிச்சேரியில் காத்து வாக்குல நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் காதல் செய்து வருகிறார். இது போதாதுன்னு வாரம் ஆனா சன் டிவியில் வாழைப் பழத்தை வைத்து மாஸ்டர் செஃப்பில் வித விதமாக டிஷ் செய்து அசத்துகிறார். மனுஷன் தூங்குவாரா? இல்லையா? ஒண்ணுமே புரியலையே என ரசிகர்கள் சுவாரஸ்ய கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

பெரிய லிஸ்ட்
கோலிவுட்டில் உண்மையாகவே பிசியாக இருக்கும் நடிகர்களின் பெயர் பட்டியலில் விஜய்சேதுபதியின் பெயர் தான் முதலிடத்தில் உள்ளதாக கூறுகின்றனர். இது மட்டும் இல்லைங்க, யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி, மாமனிதன், இடம் பொருள் ஏவல் என இன்னும் ஏராளமான படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











