விஜய்சேதுபதியின் ‘முத்து என்கிற காட்டான்‘.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: விஜய் சேதுபதியின் "முத்து என்கிற காட்டான்" வெப் தொடரின் டிரைலர் நேற்று வெளியாகி அனைவரையும் திகில் அடையச் செய்துள்ளது. இந்த இணையத் தொடரில், மலையாள நடிகர் இர்ஷாத் அலி, பிரபல பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், நடிகர்கள் சிங்கம் புலி, வேட்டை முத்துக்குமார், ரிஷா ஜேக்கப்ஸ், விஜே பாரு ஆகியோர் நடித்துள்ளனர். இதன் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
முத்து என்கிற காட்டான்: ஹீரோ, வில்லன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசத்தலாக நடித்து பெயர் எடுப்பது நடிகர் விஜய் சேதுபதியின் தனி ஸ்டைல் அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் "முத்து என்கிற காட்டான்" என்கிற வெப்தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரை மணிகண்டன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளார். மதுநீலகண்டன் ஒளிப்பதிவில், ராஜேஷ் முருகேசன் இசையில் இத்தொடரை விஜய் சேதுபதி தயாரித்துள்ளார். மணிகண்டன் கூட்டணியில் ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற திரைப்படங்கள் வெளியாகி 'ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.

ரிலீஸ் தேதி: "முத்து என்கிற காட்டான்" இணையத் தொடரின் டிரைலர் வெள்ளிக்கிழமையான நேற்று மார்ச் 13ந் தேதி வெளியானது. சஸ்பென்ஸ் நிறைந்த டிரெய்லரில், முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையுடன் உடலை தேடி போலீசார் அலைகின்றனர். பலர் கண்களுக்கு அரக்கனாக தெரியும் முத்து, சிலருக்கு நல்லவனாக தெரிகிறான். அந்த முத்து யார்? அவனை கொன்றது யார்? உடல் எங்கே போன்ற பல கேள்விகளும் இந்த டிரைலர் வெளியாகி வெப்தொடர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
டிரைலரில் காட்டப்பட்டுள்ள இந்த சம்பவத்திற்குப் பின்னால் உள்ள பின்னணி மற்றும் உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிந்த கொள்ள மார்ச் 27ந் தேதி ஜியோஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ள "முத்து என்கிற காட்டான்" என்கிற வெப் தொடரை பாருங்கள்.
இந்த தொடர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி என ஏழு மொழிகளில் ஜியோஹாட்ஸ்டாரில் மார்ச் 27 முதல் ஸ்ட்ரீம் செயப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











