Vijay Sethupathi: விஜய் சேதுபதிக்கு வந்த சோதனையா இது... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மும்பைகார்!

மும்பை: லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படமான மாநகரம் 2017ம் ஆண்டு வெளியானது.

சுந்திப் கிஷன், ரெஜினா, சார்லி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

அதனையடுத்து இந்தப் படம் இந்தியில் விஜய் சேதுபதி நடிக்க மும்பைகார் என்ற டைட்டிலில் உருவாகியுள்ளது.

மும்பைகார் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.

 Vijay Sethupathi starrer Mumbaikar is releasing on Jio OTT on 2nd June

ஓடிடியில் வெளியாகும் மும்பைகார்

குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், முதன்முதலாக மாநகரம் படத்தை இயக்கினார். 2017ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சுந்தீப் கிஷன், ரெஜினா, ஸ்ரீ, சார்லி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாசிட்டிவான விமர்சனங்களுடன் சூப்பர் ஹிட் அடித்த இந்தப் படம் தான் லோகேஷ் கனகராஜின் கேரியரையே மாற்றியது.

இந்நிலையில், மாநகரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். மும்பைகார் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாஸ்ஸி, தன்யா மாணிக்தலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முக்கியமாக மாநகரம் படத்தில் முனிஷ்காந்த் நடித்த அதே கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதுதான் விஜய் சேதுபதி நடித்த முதல் இந்தி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 Vijay Sethupathi starrer Mumbaikar is releasing on Jio OTT on 2nd June

கடந்தாண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் முடங்கிக் கிடந்தது. அதற்குள் விஜய் சேதுபதி நடித்த ஃபார்ஸி என்ற இந்தி வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாகி ஹிட் அடித்துவிட்டது. இந்நிலையில், தற்போது மும்பைகார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதனுடன் இந்தப் படத்தின் ட்ரெய்லரும் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுதியின் இன்ட்ரோவுடன் தொடங்கும் இந்த ட்ரெய்லர் காமெடி பிளஸ் கமர்சியலாக உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் இருந்த சீரியஸ்னஸ் எதுவும் மும்பைகாரில் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், விஜய் சேதுபதியின் கேரக்டர் இந்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 Vijay Sethupathi starrer Mumbaikar is releasing on Jio OTT on 2nd June

அதேநேரம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட மும்பைகார் திரைப்படம், நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது. அதன்படி இந்தப் படம் ஜூன் 2-ந் தேதி நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தியில் விஜய் சேதுபதி நடித்த முதல் இந்தி படமான மும்பைகார் ஓடிடியில் வெளியாகவுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகரம் தவிர லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படமும் இந்தியில் போலா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X