மூன்றே வாரங்களில் ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் மைக்கேல்... அங்கேயும் இப்படி சோதனையா?

சென்னை: விஜய் சேதுபதி சந்தீப் கிஷன் நடித்துள்ள மைக்கேல் திரைப்படம் இம்மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான இந்தப் படம் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றது.

ஆக்‌ஷன் ஜானரில் கேங்ஸ்டர்ஸ் படமாக உருவான மைக்கேல் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிரடியாக அறிவித்துள்ளது.

 எதிர்பார்க்கப்பட்ட மைக்கேல்

எதிர்பார்க்கப்பட்ட மைக்கேல்

விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன் நடித்திருந்த மைக்கேல் திரைப்படம், கடந்த 3ம் தெதி திரையரங்குகளில் வெளியானது. மைக்கேல் டீசர், ட்ரெய்லர் கொடுத்த வைப், படம் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்திருந்தது. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், புரியாத புதிர் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ரஞ்சித் ஜெயக்கொடி. இந்தப் படத்தை இயக்கியிருந்தார். அதனால், மேலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மைக்கேல் திரைப்படம் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றது.

 மூன்றே வாரத்தில் ஓடிடி ரிலீஸ்

மூன்றே வாரத்தில் ஓடிடி ரிலீஸ்

தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான மைக்கேல், இருதரப்பு ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது தான் சோகம். தொடர்ந்து மோசமான விமர்சனங்கள் கிடைத்ததால், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியும் அறிக்கை கொடுத்திருந்தார். அதில், அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. ஒவ்வொருவருக்கும் ரசனையும் விருப்பத் தேர்வும் மாறுபடவே செய்யும் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், திரையரங்குகளில் வரவேற்பு இல்லாததால் அதிரடியாக மைக்கேல் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

 ஆஹா ஓடிடியில் ரிலீஸ்

ஆஹா ஓடிடியில் ரிலீஸ்

பிப்ரவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான மைக்கேல், 30 கோடிக்கும் குறைவாகவே வசூலித்ததாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன், திவ்யான்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், கௌதம் வாசுதேவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர், சாம். சி.எஸ் இசையமைத்திருந்தார். இந்நிலையில், இந்தப் படம் வரும் 23ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் ஆஹா ஓடிடியில் அடுத்த வாரம் வெளியாகிறது.

 ஓடிடியில் சோதனை

ஓடிடியில் சோதனை

ஆஹா ஓடிடியில் தொடர்ந்து பல நல்ல படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார், சோனி போன்று அதிகமான சப்ஸ்கிரைபர்கள் கிடையாது. அதனால் மைக்கேல் படத்திற்கு ஓடிடி ரசிகர்களிடமும் பெரியளவில் வரவேற்பு கிடைக்காது என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மைக்கேல் ஒரு ஸ்டைலிஷான ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியும், எதிர்பார்த்த சக்சஸ் கொடுக்க முடியாமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

 விஜய் சேதுபதிக்கு சிக்கல்?

விஜய் சேதுபதிக்கு சிக்கல்?

விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்த விஜய் சேதுபதி, மைக்கேல் தோல்வியால் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். மேலும், அரண்மனை 4ம் பாகத்தில் இருந்தும் சம்பளம் காரணமாக வெளியேறியதாகக் கூறப்படுகிறது. ஹீரோ, வில்லன் என எல்லா மாதிரியான கேரக்டர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டும் விஜய் சேதுபதி, சரியான கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். மைக்கேல் திரைப்படம் மூன்றே வாரங்களில் ஓடிடியில் வெளியாவதும் அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X