Maharaja OTT: தியேட்டரில் மாஸ் காட்டும் மகாராஜா.. எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய்சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படம் ரிலீசாகி விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹீரோவாக விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்திருக்கும் இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

குரங்கு பொம்மை படத்தை இயக்கியதன் மூலம் விமர்சன ரீதியாக பெயர் பெற்றவர் நித்திலன் சுவாமிநாதன். அவரது இரண்டாவது படமான மகாராஜா கடந்த வாரம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. மகாராஜா படத்தை, வித்தியாசமான ஒரு பழிவாங்கல் கதையாக உருவாகி உள்ளார் இயக்குநர். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளனர். இதில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Maharaja Vijay sethupathi OTT OTT

விஜய் சேதுபதியின் மகாராஜா: மகாராஜா திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சென்னையில் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், , சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய விஜய் சேதுபதி இந்த படத்தின் கதையை கேட்கும் போது பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால், படம் எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி இருந்தது. தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுத்துக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தோம். இதற்கு முன்பு என்னுடைய சில படங்கள் போகாததால், விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர்ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது என்று சொல்லி இருந்தார்கள். அவற்றுக்கு எல்லாம் மகாராஜா படம் பதில் சொல்லிவிட்டது என்றார்.

குவியும் வசூல்: தற்போது மகாராஜா திரைப்படத்தின் வசூல் குறித்த தகவலை படக்குழு தெரிவித்துள்ளது. படம் இதுவரை உலகம் முழுவதும் ரூபாய் 55.80 கோடியை வசூலித்துள்ளது. 2024ஆம் ஆண்டு வெளியான படங்களில் 55 கோடியை விரைவில் வசூல் செய்த படம் என்ற பெருமை மகாராஜா படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த வாரம் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால், இந்த வாரமும் இப்படம் கணிசமான வசூலை அள்ளி விரைவில் ரூ 100 கோடியை தொடும் என்று நம்பப்படுகிறது.

எந்த தளத்தில் தெரியுமா?: இந்நிலையில், மகாராஜா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸ் வாங்கி உள்ளதால், இப்படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X