Maharaja movie: ஓடிடியில் வெளியானது மகாராஜா படம்.. விஜய் சேதுபதி மகிழ்ச்சி வீடியோ!

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதத்தில் வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான மகாராஜா படத்தில் அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான பிணைப்பை மிகச்சிறப்பாக காட்டியிருந்தார் நிதிலன் சாமிநாதன்.

மகாராஜா படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் இன்றைய தினம் ஓடிடியிலும் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் சென்று இந்த படத்தை பார்க்க முடியாத ரசிகர்கள் தற்போது ஓடிடி தளத்தில் பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Vijay sethupathi Maharaja movie Netflix ott tamil cinema

மகாராஜா படம்: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக கடந்த மாதத்தில் வெளியானது மகாராஜா. நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் அதிரடி திரில்லர் படமாக வெளியான இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்திருந்தனர். படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ், சிங்கம் புலி, அபிராமி, பாரதிராஜா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்திருந்தனர். கடந்த மாதம் 14ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் சலூன் கடை நடத்தி வருபவராக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

100 கோடி கிளப் படம்: முன்னதாக இந்த படத்தின் அடுத்தடுத்த ட்ரெய்லர்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தன. லட்சுமியை காணவில்லை என்று அப்பாவித்தனமாக போலீஸ் நிலையத்திற்கு வரும் விஜய் சேதுபதி புகார் அளிக்க, அதையடுத்து நடக்கும் காட்சிகளை கதைக்களமாக இந்த படம் கொண்டிருந்தது. முன்னதாக குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தை இயக்கி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்த நிதிலன் சாமிநாதன் இந்த படத்தை ஏழு வருடங்களுக்கு பிறகு இயக்கியிருந்தார். படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

பாராட்டுக்களை பெற்ற விஜய் சேதுபதி: நீண்ட காலங்களாக விஜய் சேதுபதி ஒரு சிறப்பான வெற்றிக்காக தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் அவரது மார்க்கெட்டை மகாராஜா படம் மீண்டும் உயர்த்தியுள்ளதாக பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் இன்றைய தினம் இந்தப் படம் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தை ரசிகர்கள் பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தனது 50வது படத்தை மறக்க முடியாத படமாக ரசிகர்களுக்கு கொடுத்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பு இந்தப் படத்தில் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

100 கோடி கிளப் ஹீரோ: சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான மகாராஜா படம் 25 நாட்களை கடந்து தற்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. 18 நாட்களை கடந்தபோதே சர்வதேச அளவில் 100 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் எட்டியது. இதன்மூலம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ள தமிழ் நடிகர்கள் பட்டியலில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார். இந்தப் படம் நான் லீனியர் திரைக்கதையில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை சிறப்பாக சித்தரித்துள்ளதாக பாராட்டுக்களையும் பெற்றது. தற்போது இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதி மகிழ்ச்சி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X