Merry Christmas OTT: விஜய்சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் ஓடிடி ரிலீஸ் எப்போ? எந்த தளத்தில் தெரியுமா?
சென்னை: அந்தாதூன் படத்தை இயக்கி ஒட்டுமொத்த இந்தியாவையே ஆட்டம் காண வைத்த ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியான மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாக போகிறது.
பல கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் இந்தி மற்றும் தமிழில் பைலிங்குவலாக உருவாக்கப்பட்டது. ஆனால், உருப்படியாக சில கோடிகளை கூட இந்த படம் வசூல் செய்யாமல் படுதோல்வியை சந்தித்தது.

கத்ரீனா கைஃப் மற்றும் விஜய்சேதுபதி இந்த படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து பெரிய அளவில் புரமோஷனை எல்லாம் செய்தார்கள். ஆனால், எதுவுமே கை கொடுக்கவில்லை.
96 படத்தை போல: பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படமே கரணம் தப்பினால் மரணம் என்கிற கதையாகவே கடைசி வரை சென்றாலும், கச்சிதமான மேக்கிங் மற்றும் கிளைமேக்ஸ் படத்தை காப்பாற்றியது. இந்நிலையில், அந்த படத்தை பார்த்து விட்டு அதே போல ஒரு படத்தை அதிலும், காதலுக்கு பதிலாக கிரைம் கலந்து பண்ணலாம் என நினைத்த கத்ரீனா கைஃப்புக்கு இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
ஹீரோவாக வொர்க்கவுட் ஆகல: கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக பாலிவுட்டில் நடிகர் விஜய்சேதுபதி ஜவான் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார். அந்த படம் 1100 கோடி வசூலை ஈட்டியது. இனிமேல் வில்லனாக நடிக்கக் கூடாது என்றும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என கத்ரீனா கைஃப் படம் வந்ததும் பல கனவுகளை கண்ட விஜய்சேதுபதிக்கு மெர்ரி கிறிஸ்துமஸ் படம் பல்பை கொடுத்தது.

ஓடிடி ரிலீஸ் எப்போ?: விஜய்சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் படம் வெளியான ஜனவரி 12ம் தேதி வெளியான தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் எல்லாம் ஓடிடியில் வெளியாகியே பழைய படமாக மாறிவிட்டன. ஆனால், இது இந்தி படம் என்பதால் 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகிறது. மார்ச் 8ம் தேதியான நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு மெர்ரி கிறிஸ்துமஸ் ஓடிடியில் வெளியாக போகிறது.
எந்த தளத்தில்?: விஜய்சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 8ம் தேதி வெளியாகிறது. தியேட்டரில் இந்த படத்தை பார்க்காத ரசிகர்கள் தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தை பார்க்க தயாராக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











