தலைவன் தலைவி ஓடிடி ரிலீஸ் எப்போ?.. கமல் போட்ட பிளான்.. கடைசியில் சூரி, விஜய் சேதுபதிக்கு ஜாக்பாட்!

சென்னை: 4 வாரங்களில் புதிய படங்களை ஓடிடியில் வெளியிடாமல் 8 வாரங்களில் வெளியிடப் போவதாக தக் லைஃப் படத்திற்காக கமல்ஹாசன் இந்தி படங்களை போல பக்கா பிளான் போட்டார். ஆனால், தக் லைஃப் திரைப்படம் தடுமாறிய நிலையில், சீக்கிரமே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஆனால், மாமன் திரைப்படம் வெளியாகி பல வாரங்கள் ஆகியும் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி தான் ஜீ5 ஓடிடி மற்றும் ஜீ தமிழில் ஒரே நாளில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல வாரங்கள் தியேட்டர்களில் ஓடிய அந்த படம் 45 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi s Thalaivan Thalaivi OTT also gets delay like Maaman due to this reason
Photo Credit:

இந்நிலையில், அதே பாணியை விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி திரைப்படமு ம் பிடிக்கப் போவதாகவும், இனிமேல் வெளியாகி ஹிட் அடிக்கும் படங்களும் 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகாமல் மேலும், சில வாரங்கள் கழித்து வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.

விதை கமல் போட்டது: 8 வாரங்களுக்குப் பிறகு தமிழ் படங்களையும் ஓடிடியில் வெளியிட்டால் தான் தியேட்டர்கள் பிழைக்கும் என்றும் மக்கள் திரையரங்குகளில் படம் பார்க்க வருவார்கள் எனக்கூறி தக் லைஃப் படத்தை 8 வாரங்கள் கழித்து தான் நெட்பிளிக்ஸில் வெளியிடுவேன் என கமல் அறிவித்து இருந்தார். ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படம் டிசாஸ்டர் ஆன நிலையில், 4 வாரத்தில் ஓடிடியில் வெளியாகி கொஞ்சம் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாமன் ஓடிடி ரிலீஸ்: மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியான மாமன் திரைப்படம் கருடன் படத்திற்கு பிறகு சூரிக்கு மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்த நிலையில், ஜூன் மாதம் 16ம் தேதி ஓடிடியில் வெளியாகாமல் ஜூலை மாதமும் கடந்து தற்போது ஆகஸ்ட் 8ம் தேதி தான் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட்டில் மாமன் படம் வெளியாக போகிறது.

6 வாரங்களில் தலைவன் தலைவி: பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி திரைப்படம் இதுவரை 30 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி திரையரங்குகளில் வார நாட்களிலும் கணிசமான வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வாரம் பல படங்கள் வந்தாலும், பெரிய படமாக ஏதும் இல்லாத நிலையில், 2வது வாரத்திலும் தலைவன் தலைவி சக்கைப் போடு போடும் என்கின்றனர். மேலும், ஆகஸ்ட் 14ம் தேதி தமிழில் கூலி மட்டுமே பெரிய படம் என்பதால், தொடர்ந்து தலைவன் தலைவி படமும் கூடவே சேர்ந்து ஓடும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில், 4 வாரத்துக்கு பதிலாக 6 வாரம் கழித்தே ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமேசான் பிரைம்: தலைவன் தலைவி படத்தை வாங்கியுள்ள அமேசான் பிரைம் 6 வாரங்கள் கழித்து அந்த படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர். மேலும், படத்திற்கு டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் பிசினஸும் சூப்பராக உள்ளது என்றும் சத்ய ஜோதி நிறுவனத்துக்கு பெரிய லாபம் தான் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X