Thalaivan Thalaivii OTT: போடுடா வெடியா.. ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி.. எந்த தளம்னு தெரியுமா?
சென்னை: விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த காதல் நகைச்சுவை படமான 'தலைவன் தலைவி' படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியான 51வது திரைப்படமான இப்படத்தில், யோகி பாபு, தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன் என நட்சத்திர பட்டாளமே பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மதுரையில் பரோட்டா கடை நடத்தி வருகிறார் விஜய்சேதுபதி, இவருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த நித்யா மேனனுக்கும் பெரியோர்களால் பார்த்து நிச்சயம் செய்யப்படுகிறது. நிச்சயம் நடந்து விட்டதால், இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர். பின், விஜய்சேதுபதியின் குடும்ப பின்னணி தெரிந்து கொண்ட, நித்யா மேனனின் பெற்றோர், இந்த சம்மந்தம் நமக்கு ஒத்து வராது என முடிவு செய்து திருமணத்தை நிறுத்துகின்றனர். அதே போல, விஜய்சேதுபதி வீட்டிலும், நித்யா மேனனை திருமணம் செய்து கொண்டால், மருமகளால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும், மகனை பிரிந்துவிடுவாள் என்று ஜோசியர் சொன்னதால், இந்த திருமணத்தை நிறுத்த நினைக்கிறது ஹீரோவின் குடும்பம்.

தலைவன் தலைவி: ஆனால்,இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதால், இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, விஜய்சேதுபதி, நித்யா மேனனை திருமணம் செய்து கொள்கிறார். கொஞ்ச நாள் வாழ்க்கை நன்றாக செல்ல, பின் குடும்பத்தில் வரும் சின்ன சின்ன சண்டையால், விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவரும் பிரிந்து விடுகின்றனர். பின், இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் 'தலைவன் தலைவி' படத்தின் கதை. இதில், விஜய்சேதுபதி, நித்யா மேனன் என அனைவரும் சிறப்பாக நடித்து இருந்தனர்.
ஓடிடி ரிலீஸ் தேதி: படம் பார்த்த பலரும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி இருப்பதாக கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர். அது மட்டுமில்லாமல், விவாகரத்து பெற்று பிரிந்த ஒரு தம்பதியினர். படம் பார்த்த பிறகு நானும் என் கணவரும் சேர்ந்து விட்டோம் என்று சொல்லியதாக படத்தின் இயக்குநர் பாண்டிராஜ், பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். கணவன் மனைவிக்குள் அன்பு, சண்டை, கோவம் எல்லாம் வரும் ஆனால், அதற்கு விவாரத்து ஒரு தீர்வு இல்லை என்ற ஒருத்தை இந்த படம் சொல்லியதாக படம் பார்த்த பலர் பாராட்டினார்கள். அதுமட்டுமில்லாமல் இப்படி படத்தை கொடுத்த இயக்குநருக்கு நன்றி என விஜய்சேதுபதி வெளிப்படையாகவே கூறியிருந்தார். பலரின் மனதை கவர்ந்த இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம், அமேசான் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 22ந் தேதி வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











