சஸ்பென்சை எகிற வைக்கும் விஜய் டிவி.,யின் ப்ரோமோ...மாலையில் டீசர்...அப்படி என்ன நிகழ்ச்சி தெரியுமா?

சென்னை : நாளை காலை 10 மணி வரை காத்திருப்போம் என்ற வாசகம் மட்டும் பிளாக் அண்ட் ஒயிட்டில், அலை அலையாக தெரியும் திரையில் காட்டப்பட்டு விஜய் டிவி.,யில் ப்ரோமோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த ப்ரோமோ வாசகர்களிடம் சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

விஜய் டிவியில் பல புதிய சீரியல்கள், நிகழ்ச்சிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்கான விளம்பரங்கள், ப்ரோமோக்கள், தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ப்ரோமோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் அந்த நேரத்தில் ஒளிபரப்புவதற்காக பல சீரில்களும் தயாராகி வருகின்றன.

சஸ்பென்ஸ் ப்ரோமோ

சஸ்பென்ஸ் ப்ரோமோ

இந்நிலையில் விஜய் டிவி.,யின் இந்த புதிய விளம்பரம் எந்த நிகழ்ச்சிக்கானது, இன்று என்ன அறிவிப்பு வரும் என பலவிதங்களில் யோசித்து வந்தனர். இந்நிலையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் தமிழில் நடைபெற உள்ளதாகவும், இதன் டீசர் இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விளம்பரம் எந்த நிகழ்ச்சிக்கானது என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதுவும் பிக்பாஸ் பற்றி விளம்பரம் தானாம்.

ஓடிடி.,யில் பிக்பாஸ்

ஓடிடி.,யில் பிக்பாஸ்

ஜனவரி 23 ம் தேதி முதல் பிக்பாஸ் தமிழ் ஓஓடி வெர்சன் துவங்கப்பட உள்ளதாகவும், மொத்தம் 42 நாட்கள் நடத்தப்பட உள்ள இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸின் ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்கள் 12 அல்லது 13 பேர் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் டிவி வெர்சனில் டைட்டில் வென்றவர்கள் இந்த ஓடிடி வெர்சனில் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்பட்டது.

 நேரடி ஒளிபரப்பா

நேரடி ஒளிபரப்பா


தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிக்பாஸ் ஓடிடி வெர்சன் பற்றிய அறிவிப்பை தான் விஜய் டிவி இன்று வெளியிட உள்ளதாம். இதன் டீசர் தான் இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாம். இந்த நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம். ஆனால் ரசிகர்களை கவர்வதற்காக 24 மணிநேரமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதா அல்லது எடிட் செய்யப்பட்ட நிகழ்ச்சியாக இருக்குமா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

கமல் தொகுத்து வழங்குவாரா

கமல் தொகுத்து வழங்குவாரா

நிகழ்ச்சி உறுதி செய்யப்பட்டு விட்டதால், இது தொடர்பான அடுத்தடுத்த கேள்விகள் சோஷியல் மீடியாவில் உலா வருகிறது. டிவி வெர்சனில் சர்ச்சையையும் பரபரப்பையும் கிளப்பிய போட்டியாளர்களான ஓவியா, வனிதா விஜயக்குமார் இந்த ஓடிடி வெர்சனில் பங்கேற்பார்களா, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார், கமலே தொகுத்து வழங்குவாரா அல்லது வேறு எதாவதொரு பிரபலம் தொகுத்து வழங்குவாரா என கேட்கப்பட்டுள்ளது.

Recommended Video

2021-ல் சீரியல் விட்டு பாதியில் வெளியேறிய பிரபலங்கள் | Tamil Celebrity who quit TV serials
தெலுங்கிலும் வருகிறது

தெலுங்கிலும் வருகிறது

இந்தியில் பிக்பாஸ் டிவி வெர்சனை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த ஆண்டு துவக்கம் முதலே ஒளிபரப்பாகி வரும் ஓடிடி வெர்சனை பிரபல டைரக்டர் கரன் ஜோகர் தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் தமிழில் எந்த பிரபலம் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தெலுங்கிலும் ஓடிடி வெர்சன் பிப்ரவரி மாதம் முதல் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X