தமன்னாவை கழட்டி விட்ட விஜய் வர்மா.. தனுஷ் பட நடிகையுடன் படுக்கையறை காட்சியில் மிரட்டுறாரே!
மும்பை: கடந்த ஆண்டு அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் என தமன்னா நடித்த கவர்ச்சியான வெப்சீரிஸ்கள் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க வைத்தது. நடிகை தமன்னாவா இப்படி உச்சகட்ட ஆபாச காட்சிகளில் நடித்துள்ளார் என அந்த வெப்சீரிஸ்களை ஏகப்பட்ட பேர் பார்த்து ஹிட்டாக்கி விட்டனர்.
லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் விஜய் வர்மாவுடன் படுக்கையறை காட்சிகளில் நடித்துத் தான் தமன்னாவுக்கும் விஜய் வர்மாவுக்கும் காதல் ஃபயர் பற்றிக் கொண்டது.

அதன் பின்னர் தான் தாங்கள் இருவரும் காதலிப்பதை அறிவித்தனர். இந்நிலையில், தமன்னாவை கழட்டி விட்டு தற்போது தனுஷுடன் அட்ரங்கி ரே படத்தில் நடித்த நடிகையுடன் படுக்கையறை காட்சிகளில் நடித்து பதற வைத்துள்ளார் விஜய் வர்மா.
மர்டர் முபாரக்: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 15ம் தேதி வெளியான படம் தான் மர்டர் முபாரக். ஹோமி அடாஜானியா இயக்கத்தில் விஜய் வர்மா, சாரா அலி கான், ஜான்வி கபூர், கரீஷ்மா கபூர், பங்கஜ் திரிபாதி மற்றும் ஆதித்யா ராய் கபூர் என ஏகப்பட்ட பாலிவுட் நட்சத்திரங்களை ஒன்று திரட்டி இந்த படத்தை இயக்கி உள்ளனர். ராயல் டெல்லி கிளப் எனும் பாரம்பரிய கிளப் ஹவுஸில் நடக்கும் பெரிய குடும்பத்து பார்ட்டியில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது மரணத்தை விபத்து என போலீஸாரிடம் சொல்லி அந்த பெரிய குடும்பத்தை காப்பாற்ற கிளப் நிர்வாகம் முடிவு செய்கிறது. காவல் அதிகாரியாக வரும் பங்கஜ் திரிபாதி வந்த கொஞ்ச நேரத்திலேயே இது விபத்து அல்ல கொலை என கண்டுபிடிக்க அந்த குடும்பத்தினரிடம் விசாரிக்க பெரிய குடும்பத்தில் புதைந்துள்ள ஏகப்பட்ட பிரச்சனைகள் வெளியே வருவது தான் இந்த மர்டர் முபாரக் படத்தின் கதை.

விஜய் வர்மா - சாரா அலி கான் கெமிஸ்ட்ரி: தமன்னாவுடன் விஜய் வர்மாவின் கெமிஸ்ட்ரி லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் எப்படி இருந்ததோ அதை விட பல மடங்கு விஜய் வர்மாவுக்கும் சாரா அலி கானுக்கும் இந்த வெப்சீரிஸில் உள்ளது. ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட ஆபாச காட்சிகளுடன் ஆரம்பிக்கும் இந்த வெப்சீரிஸில் சாரா அலி கான் எந்தளவுக்கு தனது அழகை காட்சிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு காட்டி இளைஞர்கள் மனங்களை களவாடி வருகிறார்.
லிப் லாக் முதல் படுக்கையறை சீன் வரை: லிப் லாக் முத்தக் காட்சி முதல் படுக்கையறை காட்சிகள் என ஏகப்பட்ட இன்டிமேசி காட்சிகள் நிறைந்து இளைஞர்களை கவர்கின்றன. காமெடியாகவும் கலகலப்பாகவும் அதே சமயம் டிடெக்டிவ் படமாகவும் உருவாகி உள்ள இந்த மர்டர் முபாரக் ஓடிடி படத்தில் தாராளமான ஆபாச காட்சிகள் அரங்கேறியிருப்பதால் குடும்பத்துடன் பார்க்க முடியாது. தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் பக்காவாக டப்பிங் செய்துள்ளனர்.
சாரா அலி கான் என்னை உள்ளே இழுத்துட்டாரு: ஆரம்பத்தில் சாரா அலி கானுடன் எப்படி இதுபோன்ற காட்சிகளில் நடிக்கப் போகிறேன் என யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், தனது கதாபாத்திரத்தில் ஆழமாக இறங்கிய சாரா அலி கான் என்னையும் உள்ளே இழுத்துக் கொண்டார். அதனால், தான் அவருடன் இந்தளவுக்கு நெருக்கமாக நடிக்க முடிந்தது என விஜய் வர்மா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இதையெல்லாம் பார்த்தால் தமன்னாவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











