கட்சி தொடங்குறது முக்கியமில்லை.. இதை ஃபாலோ பண்ணுங்க.. விஜய்க்கு வெப்சீரிஸ் மூலம் சேரன் அட்வைஸ்!

சென்னை: சமீபத்தில் இயக்குநர் சேரன் ஜர்னி எனும் வெப்சீரிஸை இயக்கி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியிட்டு இருந்தார். சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், திவ்ய பாரதி, கலையரசன் உள்ளிட்ட பலர் அந்த வெப்சீரிஸ் நடித்துள்ளனர். இந்நிலையில், அந்த வெப்சீரிஸில் வரும் ஒரு காட்சியை வைத்து நடிகர் விஜய்க்கு அரசியலில் இதை பின்பற்ற வேண்டும் என இயக்குநர் சேரன் தற்போது அட்வைஸ் கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்கிற அறிவிப்புடன் தனது தமிழக வெற்றி கழகம் கட்சியின் பெயரை அறிவித்தார். அவர் அறிவித்ததில் இருந்து பல பிரபலங்கள் மற்றும் சினிமா நடிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Vijay will do this for his political growth, Cheran advices

ஆதரவும் எதிர்ப்பும்: சில அரசியல் கட்சி தலைவர்கள் விஜய்க்கு எச்சரிக்கை விடுப்பது போல அவரை எதிர்த்து பேசியும் சிலர் வரட்டும் வந்து பார்த்தால் தான் தெரியும் என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர். அரவிந்த் சாமி பேசிய த்ரோபேக் வீடியோவை ஷேர் செய்து விஜய்க்கு எதிரான நெகட்டிவிட்டியையும் சோஷியல் மீடியாவில் பரப்ப ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், சேரன் போட்டுள்ள அட்வைஸ் ட்வீட் ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

வெப்சீரிஸ் காட்சி: "யார் ஒருத்தர் வேட்பாளருக்கு செலவு பண்ண வர்றேன்னு சொல்லறாங்களோ, பின்னாடி நம்மகிட்ட எதையோ எதிர்பார்கிறாங்கன்னு அர்த்தம்.அவங்களை கிட்ட சேர்த்தா நாம மக்களை விட்டுட்டு அவங்களுக்கு பதில்
சொல்ல வேண்டி வரும்" - பிரணவ் (ஆரி அர்ஜுனன்)" என சேரன் இயக்கிய வெப்சீரிஸில் வரும் ஒரு காட்சியை ரசிகை ஒருவர் சிலாகித்து சேரனை டேக் செய்துப் போட்டுள்ளார்.

Vijay will do this for his political growth, Cheran advices

விஜய்க்கு சேரன் அட்வைஸ்: அந்த வெப்சீரிஸ் காட்சியை பார்த்த சேரன், "இனிமேல் இந்த மாதிரி காட்சிகள் எப்படத்தில் வந்தாலும் புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர் விஜய் போன்றவர்களுக்கு அனுப்பினால் முதலிலேயே தங்களின் கட்சி உறுப்பினர்களை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தும்.. #JOURNEY எதை செய்யக்கூடாது என்ற தெளிவு அவசியம்." என பதிவிட்டுள்ளார்.

எல்லாத்தையும் சமாளிக்கணும்: அரசியல் கட்சியை ஆரம்பிப்பது சாதாரண விஷயம் இல்லை என்றும் நெகட்டிவிட்டி, ட்ரோல், மீம்ஸ், அச்சுறுத்தல், ரெய்டு என பல விஷயங்களும் ஒரு சின்ன விஷயம் சரியில்லைன்னாலும் பெரிய விமர்சனங்கள் வரும் இதை எல்லாத்தையும் விஜய் சமாளிக்கணும் என சோஷியல் மீடியாவில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையெல்லாம் சமாளித்து தான் ஒவ்வொரு முறையும் விஜய் படத்தையே ரிலீஸ் பண்றாரு, அரசியலிலும் அவர் இதையெல்லாம் பார்த்து அஞ்சிவிட மாட்டார், எல்லாத்துக்கும் ரெடியாகி தான் வந்திருக்கார் என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X