GOAT OTT: ரஜினிகாந்த் உடன் போட்டியெல்லாம் இல்லை.. வேட்டையனுக்கு முன்னாடியே ஓடிடியில் வரும் கோட்!
சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நாளை மறுநாள் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், யோகி பாபு, அஜ்மல், ஜெயராம், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் செப்டம்பர் 5 ஆம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.

450 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டிய கோட் திரைப்படம் ஒரு மாத காலத்திற்குள் ஓடிடியில் வெளியாகிறது. மேலும், ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துடன் இந்த படம் மோதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்துடன் மோதல் இல்லை: வரும் அக்டோபர் 10-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், தற்போது ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துக்கு போட்டியாக ஓடிடியில் கோட் படத்தை விஜய் வெளியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
கோட் ஓடிடி ரிலீஸ்: வரும் அக்டோபர் 3-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிங்கம் கோட் ஆன கதை: Ever seen a lion become a G.O.A.T? என்கிற தாறுமாறான கேப்ஷன் உடன் ஓடிடியில் விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகும் அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்னதாக விஜய்யின் லியோ திரைப்படமும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் சாதனையை படைத்த நிலையில், கோட் படமும் ரசிகர்கள் ரிப்பீட் மோடில் பார்த்து ரெக்கார்டு படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஜா சாதனை: 18 கோடி ரூபாய்க்கு ஓடிடியில் விற்கப்பட்ட மகாராஜா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பல்வேறு நாடுகளின் ரசிகர்களுக்குப் பிடித்துப் போய் அதிகம் பார்க்கப்பட்ட நிலையில், 150 கோடி ரூபாய் வரை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. 120 கோடி ரூபாய்க்கு விஜய்யின் கோட் திரைப்படம் ஓடிடியில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய் படத்தையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எக்ஸ்டண்டட் வெர்ஷன் வருமா?: கோட் திரைப்படத்தின் எக்ஸ்டண்டட் வெர்ஷன் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுதொடர்பான எந்தவொரு அறிவிப்பையும் நெட்ஃபிளிக்ஸ் இதுவரை அறிவிக்கவில்லை. எக்ஸ்டண்ட் வெர்ஷனை வெங்கட் பிரபு ஓடிடியில் வெளியிட்டால் தியேட்டர்களில் ரசிகர்கள் பார்த்ததை போலவே மீண்டும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் ஓடிடியில் விஜய்யின் கோட் படத்தை பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெச்டி பிரிண்ட் லீக்: ஓடிடியில் கோட் திரைப்படம் வரும் அக்டோபர் 3ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்னதாகவே கோட் படத்தின் ஹெச்டி பிரிண்ட் லீக் ஆகிவிட்டது என்றும் டெலிகிராம் சேனல்களில் பைரசி பிரிண்ட் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். மற்ற ஓடிடிகளை விட நெட்ஃபிளிக்ஸில் படத்தின் குவாலிட்டி தரமாக இருக்கும் என்பதால் நிச்சயம் ரசிகர்கள் நெட்ஃபிளிக்ஸில் கோட் படத்தை பார்ப்பார்கள் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.


Click it and Unblock the Notifications











