விடாமுயற்சியால் வந்த வினை.. ’கோட்’ படத்தின் ஓடிடி இன்னமும் விற்பனை ஆகலையா?.. உஷாரான நெட்பிளிக்ஸ்!
சென்னை: விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியானதுமே நெட்பிளிக்ஸ் அஜித் படத்தின் ஓடிடி உரிமத்தை பல கோடி கொடுத்து வாங்கி விட்டது. ஆனால், ஒரு வருஷம் ஆகியும் படமே இன்னும் ரெடியாகவில்லை என்பதால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரொம்பவே அப்செட் ஆகி விட்டது எனக் கூறுகின்றனர். மேலும், நெட்பிளிக்ஸில் விற்பனையான பல பெரிய படங்கள் பெரிதாக ஓடவில்லை என்பதால் பெரும் நஷ்டத்தை ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் சந்தித்து வருவதாக கூறுகின்றனர்.
நயன்தாராவின் திருமண வீடியோவுக்கு அதிக தொகை கேட்டதால் வெளியிட முடியாது என நெட்பிளிக்ஸ் நிறுவனம் மறுத்ததாக கூறப்படும் நிலையில், கோட் படத்தின் ஓடிடி உரிமையை இன்னமும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் காசு கொடுத்து வாங்கவில்லை என்கிற ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓடிடி நிறுவனங்கள் முன்பு போல ஏமாற போவதில்லை என்றும் படம் வெளியான பின்னர் அதை பார்த்து விட்டு வாங்கலாம் என்கிற முடிவுக்கு நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்கள் வந்திருப்பதாக கூறுகின்றனர்.
விலைபோகாத லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. படம் வெளியாகி 4 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், இன்னமும் லால் சலாம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவில்லை. அதே போல மேலும், சில படங்களும் தியேட்டரில் வெளியானாலும் இன்னமும் ஓடிடியில் வெளியாக முடியாமல் தவித்து வருகின்றன.
சாட்டிலைட் விற்பனை: கோட் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி வாங்க முன் வராத நிலையில், ஜீ தமிழ் நிறுவனம் 90 கோடி ரூபாய்க்கு மேல் அந்த படத்தை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஜீ தமிழ் கோட் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வாங்கி உள்ள நிலையில், அதன் ஓடிடி நிறுவனமான ஜீ5 ஓடிடி உரிமையையும் வாங்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
நோ சொன்ன நெட்பிளிக்ஸ்: ஆனால், ஏற்கனவே விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகின. சுமார் 125 கோடி ரூபாய்க்கு ஓடிடி விற்பனை நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதுவரை அந்த படத்தை வாங்கவே இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
விடாமுயற்சியால் வந்த வினை: அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு அதிக தொகை கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதன் ஓடிடியை வாங்கிய நிலையில், படம் இன்னமும் வெளியாகாதது நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை கடுப்பாக்கி விட்டதாக கூறுகின்றனர். அதன் காரணமாக எவ்வளவு பெரிய நடிகர் படமாக இருந்தாலும் படம் வந்த பின்னர் அது ஓடினால் மட்டுமே பெரிய தொகை கொடுத்து வாங்கும் முடிவை நெட்பிளிக்ஸ் எடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
குறையும் மார்க்கெட்: கோட் படத்தின் ஷாட்ஸ் மற்றும் பாடல்கள் இதுவரை வெளியான நிலையில், பெரிதாக ரசிகர்கள் மத்தியில் எந்தவொரு ஹைப்பையும் கிரியேட் செய்யவில்லை எனக் கூறுகின்றனர். இந்நிலையில், கோட் படத்தின் பிசினஸ் ரொம்பவே பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். கோட் படத்தின் டீசர் வெளியானால் தான் படத்திற்கான ஹைப் உருவாகும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











