GOAT OTT: விஜய்யின் 'கோட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் இந்த தேதியிலா?.. அப்போ ஆயுத பூஜைக்கு டபுள் தமாக்கா!
சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமா முதல் பாதியில் எந்த அளவுக்கு வெற்றிப்படங்கள் கிடைக்கவில்லை என புலம்பித் தவிக்கிறதோ அதெல்லாம் இன்னும் சில மாதங்களில் மாறிவிடும் நிலைமை வரும் என்றே தெரிகிறது. பல முன்னணி நடிகர்களும் இப்போதே 2024ன் இரண்டாம் பாதியில் வரும் ஒவ்வொரு மாதத்துக்கும் தங்கள் படத்துக்கான சீட்டை பிடித்து வைக்க ஆரம்பித்துள்ளனர்.
ஜூன் மாதம் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள பிரம்மாண்ட படமான இந்தியன் 2 திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. அதேபோல அக்டோபர் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வெளியாகும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது செப்டம்பர் மாதத்தை தளபதி விஜய் தனது கோட் படத்திற்காக பிடித்து வைத்துள்ளார். மேலும், செப்டம்பர் 5-ஆம் தேதி படம் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் என்று பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்களும் கசிந்துள்ளன.
விநாயகர் சதுர்த்தி ரிலீஸ்: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், டாப் ஸ்டார் பிரசாந்த், நடனப் புயல் பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா அஜ்மல் மற்றும் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம். மே மாத இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், டி ஏஜிங், சிஜி உள்ளிட்ட ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பணிகளும் நிறைவடைந்து படம் அதிரடியாக வெளியாகும் என்கிற அறிவிப்பு இன்று விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆசிரியர் தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோட் திரைப்படம் திரைக்கு வருகிறது.
ஓடிடி ரிலீஸ்: அப்பா மகன் என டபுள் ஆக்ஷனில் தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நான்கு வாரங்கள் கழித்து சரியாக அக்டோபர் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கோட் திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓடிடி உரிமம்: கோட் படத்தின் தென்னிந்திய ஓடிடி உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் 125 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தின் இந்தி டிஜிட்டல் ரைட்ஸ் தனியாக இன்னொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.
ஆயுத பூஜைக்கு டபுள் தமாக்கா: கடந்தாண்டு ஆயுத பூஜைக்கு விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியானது. இந்த ஆண்டு ஆயுத பூஜையை ரஜினிகாந்தின் வேட்டையன் படம் புக் செய்துள்ளது. அதேபோல ஆயுதபூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு ஓடிடியில் கோட் படம் வெளியாக போகிறது.
வரிசையாக படங்கள்: இந்தியன் 2, கோட், வேட்டையன் படங்களின் ரிலீஸ் அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி மற்றும் சூர்யாவின் கங்குவா உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. மேலும், சியான் விக்ரமின் தங்கலான், சிவகார்த்திகேயனின் அமரன், கவினின் ஸ்டார் உள்ளிட்ட படங்களும் வெளியாக காத்திருக்கின்றன. மேலும், அல்லு அர்ஜுனின் புஷ்பா, பிரபாஸின் கல்கி, ஜூனியர் என்டிஆரின் தேவரா, ராம் சரணின் கேம் சேஞ்சர் என மற்ற மொழி நடிகர்களின் படங்களும் பான் இந்தியா ரிலீஸ் செய்யப் போகின்றன.


Click it and Unblock the Notifications











