குட் பேட் அக்லி எல்லாம் என்ன?.. ஜனநாயகன் ஓடிடி உரிமையை பெரிய தொகை கொடுத்து வாங்கிய அமேசான் பிரைம்?
சென்னை: ஓடிடி உரிமம் விற்காத நிலையில் விக்ரமின் வீர தீர சூரன் படத்தில் ரிலீஸை தயாரித்து நிறுவனம் அறிவித்தது தான் அந்த பலன் திட்டமிட்ட நேரத்தில் வெளியாகாமல் போனதற்கு காரணம் என சர்ச்சைகள் வெடித்தன. தமிழ் சினிமாவில் தற்போது புதிய படங்களின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வது ஓடிடி வியாபாரம் தான் என்று கூறுகின்றனர்.
முன்பை போல பெரும் தொகை கொடுத்து புதிய படங்களையும் பெரிய நடிகர்களின் படங்களையும் ஓடிடி நிறுவனங்கள் வாங்குவதில்லை என்றும் அடிமாட்டு விலைக்கு கேட்பதாகவும் பல தயாரிப்பாளர்கள் புலம்பித் தவித்து வரும் நிலையில், மிகப்பெரிய தொகைக்கு விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் ஓடிடி விற்பனை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
விஜய்யின் கடைசி படம்: தளபதி என தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வரும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். அதன் காரணமாக சினிமாவை விட்டு நிரந்தரமாக விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார். ஜனநாயகன் திரைப்படம் தான் விஜயின் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அந்த முடிவில் மாற்றம் வரும் என்று பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால். தனது கட்சி போட்டியிட்டு வெற்றி பெறும் என்கிற முழு நம்பிக்கையுடன் ஜனநாயகன் படத்தின் வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு தீவிரமாக அரசியல் களத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் விஜய்.
ஜனநாயகன் ஓடிடி விற்பனை: அமேசான் பிரைமில் ரஜினிகாந்தின் ஜெயிலர், பொன்னியின் செல்வன் போன்ற பெரிய படங்கள் வெளியாகின. சமீப காலமாக, சொதப்பல் படங்களாக வாங்கி வெளியிட்டு வருவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் நிலையில், விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இத்தனை கோடிக்கா?: தியேட்டர் பிசினஸ் எப்படி சமீப காலமாக டல் அடித்து காணப்படுகிறதோ, அதே போல ஓடிடி நிறுவனங்களின் வருமானமும் பெரிய சரிவு சந்தித்துள்ளதாக கூறுகின்றனர். அதன் காரணமாக புதிய படங்களுக்கு குறைவான அளவில் மட்டுமே காசு கொடுப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு அதிகபட்சமாக 121 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் இந்த படத்தை வாங்கி இருப்பதாக கூறுகின்றனர். இந்தி வெர்ஷன் 8 வாரங்கள் கழித்து மட்டுமே வெளியாகும் என்றும் அக்ரீமெண்ட் போடப்பட்டுள்ளதாம். அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் 95 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
1000 கோடி வருமா?: தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு நடிகர் படமும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை பாக்ஸ் ஆபிஸில் அள்ளவில்லை. இந்த ஆண்டு ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் அந்த இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு எச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜனநாயகம் திரைப்படமும் 1000 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பான் இந்தியா அளவுக்கு தரமான கதையை எச். வினோத் உருவாக்கினால் மட்டும் தான் அது சாத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











