ஓடிடியில் வெளியாகுதா ஜன நாயகன்?.. வாய்ப்பே இல்லை ராஜாவா?.. அதுதான் கடைசி சான்ஸா?
சென்னை: உச்சநீதிமன்றத்துக்கு சென்றாலும் அவசர கதியில் வழக்கை விசாரிக்க மாட்டோம் என படு அவசரமாக திருப்பி விட்டு ஜன நாயகன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இந்த பொங்கல் பட்டினி பொங்கல் தான் என போட்டு விட்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஜாலியாக குழந்தைகளின் கண்ணாடி எல்லாம் வாங்கிப் போட்டுக் கொண்டு மலேசியாவில் ஜன நாயகன் ஆடியோ லான்ச்சில் ஒன் லாஸ்ட் டைம் ஸ்டேஜ் டான்ஸ் எல்லாம் போட்ட விஜய் இந்த பொங்கலுக்கு எந்தவொரு கொண்டாட்டத்தையும் கொண்டாடவே இல்லை என்பது கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

இந்நிலையில், ஜன நாயகன் திரைப்படம் டைரக்ட்டாக ஓடிடியில் வெளியானால் தான் விஜய்யின் ஒட்டுமொத்த வசனங்களும் ரசிகர்களை சென்று சேரும் என்கிற நிலை உருவாகியுள்ள நிலையில், ஜன நாயகனை ஓடிடியில் வெளியிடப் போகிறாரா விஜய் என்கிற வதந்தியும் காட்டுத் தீ போல பரவி வருகிறது.
ஓடிடியில் வெளியாகுதா ஜன நாயகன்?: எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறது. அதுவும் வரும் குடியரசு தினத்துக்கே என ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் சிலர் கிளப்பி விட்ட வதந்தி தான் வைரலாகி வருகிறது. ஆனால், படக்குழு தரப்பில் அப்படியொரு ஐடியாவே இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாய்ப்பே இல்லை ராஜா: சுமார் 450 கோடி பிசினஸ் கொண்ட விஜய்யின் ஜன நாயகன் படத்தின் ஓடிடி விற்பனை வெறும் 110 கோடிக்கு தான் சேல்ஸ் ஆகியுள்ளது. ஜீ தமிழ் சாட்டிலைட் உரிமத்தை 90 கோடிக்கு வாங்கியதாகவே இருந்தாலும் ஒட்டுமொத்தமாக 200 கோடி தான் பிசினஸ். தியேட்டர் பிசினஸே இந்த படத்துக்கு 230 கோடிக்கு மேல் உள்ள நிலையில், கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அதற்கு ஒரு நாளும் சம்மதம் தெரிவிக்காது என்றே தெரிகிறது.
சென்சார் போனால் படமே காலி: ஆனால், அதே சமயம் விஜய் பகவந்த் கேசரி படத்தை எடுத்துக் கொண்டு தனது அரசியல் பிரவேசத்துக்காக திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்து வசனங்களை வைத்துள்ளார் என்றும் சென்சாருக்குப் போனால் 27 இடங்களில் வெட்டு விழுவும், விஜய்யின் வசனங்கள் எல்லாம் மியூட் செய்யப்படும் அபாயமும் உள்ள நிலையில், ஜன நாயகன் படத்தை ஓடிடியில் அதுவும் தேர்தலுக்கு முன் வெளியிட்டால் தான் விஜய்க்கு லாபமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். என்ன நடக்கிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











