GOAT OTT: தி கோட் படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா?.. வேறலெவல் ஸ்கெட்ச் போட்ட விஜய்!
சென்னை: தளபதி விஜய்யின் லியோ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் அந்த படம் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், லியோ படத்தை விட டபுள் மடங்கு லாபத்தை தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஓடிடி மூலம் பெற வேண்டும் என்கிற முனைப்பை தயாரிப்பு நிறுவனம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் எந்தவொரு ஒளிவு மறைவும் இன்றி உருவாகி வருகிறது. படத்தின் டைட்டில் முன்னதாகவே கசிந்தது போல படத்தில் மகன் விஜய் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதும் ரிவீல் ஆகி விட்டது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் அதிக தொகைக்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஓடிடி ரிலீஸை வாங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மங்காத்தா, மாநாடு படங்களை விட: லியோ படம் லோகேஷ் கனகராஜ், எல்சியூ என ஹைப் இருந்தது. ஆனால், வெங்கட் பிரபுவின் தி கோட் படத்துக்கு பெரிதாக ஹைப் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா மற்றும் லைலா என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்ததும் ஒரு ஹைப் வெளியானது. ஆனால், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியானதும் இந்த படம் லியோவை விட ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். மங்காத்தா, மாநாடு படங்களை விட பெரிய சம்பவத்தை வெங்கட் பிரபு விஜய்யை வைத்த செய்யப் போகிறாராம்.
ஓடிடி வியாபாரம்: தியேட்டரில் லியோ படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி வசூல் ஈட்டிய நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மட்டும் 125 கோடிக்கு டிஜிட்டல் உரிமத்தை விற்பனை செய்திருக்கிறது என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஓடிடி தென்னிந்தியா மற்றும் வட இந்தியா என பிரித்து விட்டார்களாம். வட இந்தியாவில் 2 மாதம் கழித்துத் தான் ஓடிடியில் படம் வெளியாகும். ஆனால், தென்னிந்தியாவில் 4 வாரங்களுக்குள் படம் வெளியாகி விடும். இதன் மூலம் வட இந்தியாவில் லியோ மிஸ் செய்தது போல மல்டி பிளக்ஸ் காட்சிகளும் மிஸ் ஆகாது என்றும் வட இந்தியா மற்றும் தென்னிந்தியா என டபுள் வருமானத்தை பார்க்க ஏஜிஎஸ் நிறுவனம் பக்கா பிளான் போட்டுள்ளதாக கூறுகின்றனர்.
200 கோடி: 125 கோடிக்கு தென்னிந்தியாவின் டிஜிட்டல் உரிமம் மட்டுமே விற்பனையாக உள்ளதாகவும், வட இந்திய டிஜிட்டல் உரிமம் 75 கோடிக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் ஒட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய் லாபத்தை நெட்பிளிக்ஸ் மூலமாக எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து தென்னிந்திய படங்கள் நெட்பிளிக்ஸில் சிறப்பாக ஓடி வருவதால் பெரிய தொகையை விஜய் படத்துக்கு நெட்பிளிக்ஸ் கொடுக்க முன் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











