விஜய்சேதுபதியின் மாமனிதன் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா? ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ஹாட் அப்டேட்!
சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய வரவேற்பு பெறாத நிலையில், உடனடியாக ஓடிடியில் வெளியாக போகிறது.
நல்ல படம் என இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் மாமனிதன் படத்தை பாராட்டினாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை குவிக்க தவறியது மாமனிதன்.
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்த நிலையில், அந்த படத்திற்கு வந்த வரவேற்பு இந்த படத்துக்கு ஏன் இல்லை என்கிற கேள்விகளும் கிளம்பின.

மோசமான ஆண்டு
கடந்த ஆண்டு நடிகர் விஜய்சேதுபதிக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. அவர் நடிப்பில் வெளியான லாபம், துக்ளக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி என மூன்று படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. ஆனால், அதற்கு நேர் மாறாக இந்த ஆண்டு விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே 2வது சிறந்த படம்
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த கடைசி விவசாயி திரைப்படம் உலகிலேயே இந்த ஆண்டு வெளியான சிறந்த 2வது திரைப்படம் என லெட்டர் பாக்ஸ் இணையதளம் அங்கீகாரம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய்சேதுபதி தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் நல்லாண்டி எனும் மூத்த நடிகர் தான் ஹீரோவே, விஜய்சேதுபதி கேமியோவாகவே வந்து செல்வார்.

சமந்தா, நயன்தாரா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் நானும் ரவுடி தான் மேஜிக்கை தியேட்டரில் இந்த ஆண்டு ரிலீஸான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் செய்தது. விஜய்சேதுபதி உடன் சமந்தா மற்றும் நயன்தாரா நடித்த அந்த படம் உலகளவில் 65 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த ஆண்டு ஹீரோவாக விஜய்சேதுபதி நடித்து வசூல் செய்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் மட்டும் தான்.

விக்ரமில் வில்லன்
400 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் வில்லன் சந்தனமாக விஜய்சேதுபதி வெறித்தனமாக நடித்திருப்பார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய்சேதுபதி, இந்த படத்தில் கமலுடன் மோதும் காட்சிகள் எல்லாம் வெற்த்தனத்தின் உச்சமாகவே இருந்திருக்கும்.

பாராட்டு மட்டுமே
விக்ரம் படம் வெளியான வேகத்திலேயே மாமனிதன் படத்தையும் வெளியிட்டு வசூல் அள்ளி விடலாம் என நினைத்த நிலையில், அந்த படம் வெளியானதும் பாராட்டுக்கள் மட்டுமே குவிந்தன. ஆனால், தியேட்டருக்கு மாமனிதனை பார்க்க டிக்கெட் எடுத்துக் கொண்டு ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் வராத நிலையில், உடனடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

மாமனிதன் ஓடிடி ரிலீஸ்
கடந்த ஜூன் 24ம் தேதி மாமனிதன் வெளியான நிலையில், ஒரு மாத காலம் கூட ஆகாத நிலையில், வரும் ஜூலை 15ம் தெதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் மாமனிதன் வெளியாக போகும் அறிவிப்பை தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மாமனிதன் உங்கள் வீட்டை தேடியே வருகிறான் என்கிற கேப்ஷன் உடன் அந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விக்ரம் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று இரவு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications