விக்ரம் -துருவ் இணையும் மகான் படம்... ஓடிடியில் நேரடி ஒளிபரப்பு

சென்னை : நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் மகான்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் அமேசான் ப்ரைமில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரமின் 60வது படம்

விக்ரமின் 60வது படம்

நடிகர் விக்ரமின் 60வது படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் ஜகமே தந்திரம் படத்திற்கு பிறகு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் படம்

கேங்ஸ்டர் படம்

கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஓடிடியில் வெளியீடு

ஓடிடியில் வெளியீடு

இந்நிலையில் தற்போது இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் படமும் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

துருவ்வின் லுக்

துருவ்வின் லுக்

கடந்த மாதத்தில் துருவ் விக்ரமின் லுக்கை படக்குழு வெளியிட்டது. முன்னதாக விக்ரமின் லுக் வெளியான நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி துருவின் லுக் வெளியிடப்பட்டது. கார்த்திக் சுப்புராஜ் இந்த லுக்கை வெளியிட்ட நிலையில் படத்தில் விக்ரமின் மகனாக தாதா என்ற கதாபாத்திரத்தில் துருவ் நடித்துள்ளதை அவர் உறுதி செய்திருந்தார்.

தந்தையுடன் இணைந்த துருவ்

தந்தையுடன் இணைந்த துருவ்

ஆதித்ய வர்மா படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், இரண்டாவது படத்திலேயே தன்னுடைய தந்தையுடன் இணைந்து பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அவரது கேரக்டர் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஓடிடியில் நேரடி ரிலீஸ்

ஓடிடியில் நேரடி ரிலீஸ்

இந்தப் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ள நிலையில் படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் ஓடிடியில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்தப் படம் அவருக்கு கைகொடுக்கும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X