பொங்கலுக்கு ஓடிடியில் ரிலீசாகும் விக்ரம் -துருவ்வின் மகான்?

சென்னை : நடிகர் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், மகான் மற்றும் கோப்ரா படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தன்னுடைய மகன் துருவுடன் அவர் நடித்துள்ள மகான் படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் தொடர்ந்து சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகராக கோலிவுட்டில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அவருடைய மகன் துருவ் கதாநாயகனாக ஆகியுள்ள நிலையிலும் தொடர்ந்து சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் விக்ரம்.

ஓடிடியில் மகான்?

ஓடிடியில் மகான்?

விக்ரம் தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், மகான் மற்றும் கோப்ரா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்களில் மகான் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். தனுஷ் நடிப்பில் இவரின் முந்தைய படமான ஜகமே தந்திரமும் ஓடிடியில் ரிலீசான நிலையில் மகான் படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விரைவில் ட்ரெயிலர்

விரைவில் ட்ரெயிலர்

ஆனால் தற்போது மகான் படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேங்ஸ்டர் படம்

கேங்ஸ்டர் படம்

கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன்ஸ் ஸ்டூடியோஸ் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் விக்ரம் மற்றும் துருவின் லுக் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. இவை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

பொங்கலுக்கு ஓடிடி ரிலீஸ்?

பொங்கலுக்கு ஓடிடி ரிலீஸ்?

இந்நிலையில் ஓடிடியில் வரும் பொங்கலையொட்டி இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளியையொட்டி ஜெய் பீம், எம்ஜிஆர் மகன் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், பொங்கலுக்கு மகான் படம் ரிலீசாவது ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தியாகவே இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X