ஓடிடி-யை கலக்க வரும் சூப்பர் ஸ்டார்கள்.. இந்த வாரம் எந்தெந்த படங்கள் தெரியுமா?

சென்னை: திரையரங்குகளில் வெளியான புதிய படங்கள் 3 அல்லது 4 வாரங்கள் கழித்து ஓடிடி தளத்தில் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் பெரிதாக இருக்கிறது. இதில், ஹிட் படங்களின் வரிசையும் அதிகரித்துள்ளன. குறிப்பாக முதல் முறையாக ரூ.300 கோடி வசூல் செய்த படத்தின் வரவால் ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர். அவர்களது ரசிகர்களும் அப்படத்தை ஓடிடி தளத்தில் கண்டு களித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது என்பதை காணலாம்.

எல் 2 எம்புரான்: நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான எல் 2 எம்புரான் திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. இதில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், பிருத்விராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும், இப்படம் வெளியான முதல் 2 நாட்களிலேயே 100 கோடி வசூல் செய்து மலையாள திரையுலகில் புதிய மைல் கல்லை எட்டியது. அதேபோன்று மலையாள சினிமாவில் 300 கோடி வசூல் செய்த முதல் படமாக எல் 2 எம்புரான் இருக்கிறது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்கள் ஆரவாரத்தோடு திரையரங்குகளில் கண்டு களித்தனர். மேலும், மதம் குறி்த்த சர்ச்சைகளையும் சந்தித்த இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகியுள்ளது.

vikram-mohanllal-movies-ott-release-date-announce

வீர தீ சூரன் 2: சித்து பட இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்திருக்கும் படம் வீர தீர சூரன் 2. மதுரையை மையமாக கொண்டு கேங்ஸ்டர் படமாக வெளியானது. வீர தீர சூரன் 2 திரைப்படம் திரையரங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு பின்னர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தூள், தில், அருள் போன்று இருப்பதாகவும் தெரிவித்தனர். படத்தின் வசூலும் 50 கோடியை தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வரும் 24ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

மேட் ஸ்கொயர்: கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான மேட் திரைப்படம் 4 கல்லூரி நண்பர்களை மையமாக வைத்து வெளியானது. இப்படத்தில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னை, காதல் கலந்த காமெடியாக வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்தது. தெலுங்கு திரையுலகில் இப்படத்தில் நடித்த புதுமுக நடிகர்களுக்கும் பிரேக் கொடுத்த படமாக இருந்தது. இந்நிலையில்,இதன் 2ஆம் பாகமான மேட் ஸ்கொயர் கடந்த மாதம் வெளியானது இப்படம் கல்லூரியை முடித்த பின்பு ஒன்று சேறும் கல்லூரி நண்பர்கள் தங்களது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து வெளியானது. முதல் பாகத்தை போன்றே மேட் ஸ்கொயர் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை கல்யாண் ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படம் நாளை ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிறம் மாறும் உலகில்: அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி. இயக்கத்தில் பாரதி ராஜா, வடிவுக்கரசி, யோகி பாபு, ரியோ ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்த படம் நிறம் மாறும் உலகில். குடும்ப உறவுகளை பற்றி மிகச்சிறப்பாக பேசியிருக்கம் படம் நிறம் மாறும் உலகில். நடுத்தர இளைஞர்கள் பிரச்னையோடு வாழ்க்கையை நடத்துவதாக கூறும் வசனங்கள் சிறப்பாக இருந்தது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும், இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X