சியான்61 ஓடிடி ரைட்சையும் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்..என்ன இப்படி வளைச்சுவளைச்சு வாங்கிட்டு இருக்காங்க!

சென்னை : நடிகர் விக்ரம் தொடர்ந்து தன்னுடைய கேரியரை சிறப்பாக கொண்டு சென்று வருகிறார்.

சமீபத்தில் வெளியான அவரது கோப்ரா படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், வசூலில் ஓரளவிற்கு கைக்கொடுத்தது.

தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷனல் டூரில் இணைந்துள்ளார். இந்திய அளவில் அவருக்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் தன்னுடைய கேரியரில் பல கரடுமுரடான பாதைகளை கடந்து வந்தவர், ஆரம்ப காலகட்டங்களில் இவர் நடித்த காதல் படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுக்காத நிலையில், பாலா இயக்கத்தில் வெளியான சேது படம் நல்ல என்ட்ரியை கோலிவுட்டில் கொடுத்தது.

மிரட்டலான சேது படம்

மிரட்டலான சேது படம்

இந்தப் படத்தை தொடர்ந்து முழித்துக் கொண்ட விக்ரம், அடுத்தது எடுத்த அனைத்து முயற்சிகளும் மிரட்டலான அனுபவத்தை கொடுத்தவை. சேது படத்திலேயே இந்த முயற்சியை அவர் எடுத்துவிட்டார். ஐ உள்ளிட்ட படங்கள் இவரது கேரியர் பெஸ்ட் படங்களாக அமைந்தன.

மகான் படத்தின் சிறப்பான விமர்சனம்

மகான் படத்தின் சிறப்பான விமர்சனம்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மகான் படத்தில் தன்னுடைய மகன் த்ருவ் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். ஓடிடியில் வெளியான போதிலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் நல்ல விமர்சனங்களை விக்ரமிற்கு பெற்றுத் தந்தது. தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோப்ரா படம் வெளியானது.

கோப்ராவின் கலவையான விமர்சனங்கள்

கோப்ராவின் கலவையான விமர்சனங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்திலும் வித்தியாசமான கெட்டப்புகளை விக்ரம் போட்டிருந்தார். ஆனால் அதுமட்டுமே ஒரு படத்திற்கு போதாது என்பதை ரசிகர்கள் நிரூபித்தனர். இதனிடையே இன்னும் இரு தினங்களில் இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ளது.

பிரமோஷனல் டூரில் விக்ரம்

பிரமோஷனல் டூரில் விக்ரம்

சர்வதேச அளவில் பிரம்மாண்டமான அளவில் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கான பிரமோஷனல் டூரில் படக்குழுவினருடன் இணைந்துள்ளார் விக்ரம். தன்னுடைய சியான் 61 படத்திற்காக தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் இணைந்துள்ளார் விக்ரம். இந்தப் படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் போடப்பட்டது.

சியான்61 படத்தின் ஓடிடி ரைட்ஸ்

சியான்61 படத்தின் ஓடிடி ரைட்ஸ்

பீரியட் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு தற்காலிகமாக மைதானம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பே இன்னும் துவங்காத நிலையில் படத்தின் ஓடிடி ரைட்சை தற்போது நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.

அடுத்தடுத்த படங்களை கைப்பற்றும் நெட்பிளிக்ஸ்

அடுத்தடுத்த படங்களை கைப்பற்றும் நெட்பிளிக்ஸ்

அஜித்தின் துணிவு, ராகவா லாரன்சின் சந்திரமுகி 2, உதயநிதியின் மாமன்னன் படங்கள் இன்னும் ரிலீசாகாத நிலையில் இந்தப் படங்களில் ஓடிடி உரிமங்களை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்னும் ரிலீசாகாத நிலையில் சியான் 61 படத்தின் ஓடிடி உரிமையையும் தற்போது கைப்பற்றியுள்ளது. என்ன இது அடுத்தடுத்த படங்களின் ஓடிடி உரிமைகளை நெட்பிளிக்ஸ் வளைச்சி வளைச்சி கைப்பற்றிக் கொண்டுள்ளதே என்ற கேள்வியையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X