விக்ரம் பிரபுவின் டாணாக்காரன்... ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு!

சென்னை : நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ளது டாணாக்காரன் படம்.

இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாணாக்காரன் படம்

டாணாக்காரன் படம்

நடிகர் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் டாணாக்காரன். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தமிழ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு படத்தை தயாரித்துள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு

நடிகர் விக்ரம் பிரபு

படத்தில் விக்ரம் பிரபு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் மற்றும் லால் கதாபாத்திரங்கள் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். போலீஸ் பயிற்சி மேற்கொள்ளும் காவலர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அடிமைத்தனத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜிப்ரான் இசை

ஜிப்ரான் இசை

அடிமைத்தனமும் அடக்குமுறையும் இங்க இருக்கு. அதை எதிர்த்து கேள்வி வரத்தான் செய்யும் போன்ற வசனங்கள் டீசரில் இடம் பெற்றுள்ளது. இது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் ஜிப்ரானின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

சிறப்பான டீசர்

சிறப்பான டீசர்

படத்தில் காவலர் பயிற்சி பள்ளி அதிகாரியாக இருக்கும் லால் எவ்வளவு கடுமையான பயிற்சிகளை அளிக்கிறார். அவரது பயிற்சியில் உள்ள கொடுமைகள், அரசியல் குறித்து டீசரில் காட்சிகள் அமைந்துள்ளன. படத்தின் இயக்குநர் தமிழ் போலீஸ் வேலையில் இருந்து விலகி வந்தவர் என்பதும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Recommended Video

Bigg Boss 5 Priyanka ஜெயிக்கணும் | Actor Dhiraviam Exclusive | Filmibeat Tamil
வெற்றிக்கு காத்திருக்கும் விக்ரம் பிரபு

வெற்றிக்கு காத்திருக்கும் விக்ரம் பிரபு

நீண்ட நாட்களாக ஒரு வெற்றிப் படத்திற்காக காத்திருக்கும் விக்ரம் பிரபுவிற்கு இந்தப் மிகச்சிறந்த வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசர் இதை உறுதிப்படுத்தும்வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

ஓடிடியில் ரிலீஸ்

ஓடிடியில் ரிலீஸ்

இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிட தயாரிப்புக்குழு தற்போது பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X