தீபாவளி ரேஸில் இணைந்த விக்ரம் பிரபு படம்... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி திரைப்படத்தின் ஓடிடியில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

2012ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் சினிமாவில் விக்ரம் பிரபு அறிமுகமானார்.

Vikram prabhu starrer pulikkuthi pandi movie ott release date announced

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடித்திருந்தார். யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக மாபெரும் வெற்றியைப் பெற்றது.

புலிக்குத்திப்பாண்டி: கும்கி படத்தைத் தொடர்ந்து, முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மீண்டும் கூட்டணி இணைந்து நடித்த திரைப்படம் புலிக்குத்திப்பாண்டி. இப்படத்திற்கு பேச்சி என்று தலைப்பு வைக்கப்பட்டது.ஆனால், சில காரணத்தால், படத்திற்கு புலிக்குத்தி பாண்டியன் என்று பெயர் மாற்றப்பட்டது.

நேரடியாக டிவியில்: சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக தியேட்டரில் வெளியானது. இப்படத்தில், சமுத்திரகனி, சிங்கம் புலி, ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படத்தின் கதை: சண்டை போட்டுவிட்டு கோர்ட், போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைந்து கொண்டிருக்கும் ஹீரோவை திருத்தி, குடும்ப வாழ்க்கையை வாழ்வதுதான் புலிக்குத்தி பாண்டி திரைப்படத்தின் கதை. இப்படத்தில் விக்ரம் பிரபுவின் மனைவியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

இப்படத்தில் கொம்பன் படத்தில் வரும் பல காட்சிகள் அப்படியே இருக்கிறது. அப்புறம், குட்டிப்புலி, மருது படத்தின் வரும் காட்சிகளையும் பல இடங்கள் நினைவுபடுத்திவிட்டு செல்கிறது. ஹீரோயின் சொன்னவுடன் அப்படியே ஹீரோ விக்ரம் பிரபு முழுசா திருந்தி அநியாயத்திற்கு நல்ல குடும்பஸ்தனாக மாறிவிடுகிறார்.

ஓடிடியில்: 2021ம் ஆண்டு தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், தற்போது படம் வரும் நவம்பர் 10-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பலத் திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படம் தற்போது தீபாவளி ரேஸில் இணைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X