This week OTT streaming: இந்த வார ஓடிடி வெளியீட்டு படங்கள்.. தங்கலான் படத்தை பார்த்துட்டீங்களா?

ஒவ்வொரு வாரமும் ரசிகர்களை சிறப்பான வகையில் ஓடிடி வெளியீட்டு படங்கள் கவர்ந்து வருகின்றன. கொரோனா காலத்து கொடையாக பார்க்கப்படும் ஓடிடி தளங்களில் இந்த இந்த வாரமும் அடுத்தடுத்து சிறப்பான பல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. அந்த வகையில் தற்போது விக்ரமின் தங்கலான், Venom : the last dance உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹாலிவுட் படங்கள் இந்த வாரத்தில் மிகவும் அதிகமாக வெளியாகவுள்ளன. இந்த 2024ம் ஆண்டு ஏறக்குறைய நிறைவடையவுள்ள நிலையில், அடுத்தடுத்து பல தளங்களில் பல படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. வாரயிறுதி நாட்களில் இந்தப் படங்களை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

thangalaan movie vikram

இந்த வார ஓடிடி வெளியீட்டு படங்கள்: ஒவ்வொரு வாரமும் ஓடிடி வெளியீட்டு படங்கள் மிகப் பெரிய கவனத்தை பெற்று வரும் சூழலில் இந்த வாரமும் அடுத்தடுத்து மிகச் சிறப்பான படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்த நாட்களில் வெளியாகவுள்ளன. குறைந்த அளவிலான தொகையைக் கட்டி நிறைவான பல படங்களை ஓடிடி தளங்கள் மூலம் பார்க்க முடியும் என்ற சிறப்புடன் இந்த தளங்கள் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது விக்ரமின் தங்கலான் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தங்கலான் படம்: தங்கலான் படம் வெளியாகி சில மாதங்களை கடந்துள்ள நிலையில் படம் ஓடிடியில் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்தன. இந்நிலையில் அவற்றையெல்லாம் கடந்து தற்போது விக்ரமின் தங்கலான் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையிலும் வசூலில் சொதப்பலாகவே அமைந்தது. இந்நிலையில் தங்கலான் படம் ஓடிடியில் ஏராளமான ரசிகர்களை கவரும் என்றும் அதிகமான வியூஸ்களை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல தற்போது அடுத்தடுத்த படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன.

அதிகமான ஹாலிவுட் படங்கள்: இவற்றில் குறிப்பாக Venom :the last dance படம் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது ஓடிடியில் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கனகராஜ்யம் படமும் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள நிலையில் ஆங்கிலத்தில் Dune prophecy, Sting, The crow, Secret level, Cash out, Sugarcane உள்ளிட்ட படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதனிடையே இன்றைய தினம் One hundred years of Solitute மற்றும் மரியா படங்களும் வெளியாகவுள்ளன.

மலையாள, இந்தி படங்கள்: நாளைய தினம் தெலுங்கில் ரோட்டி கப்டா ரொமான்ஸ் படம் ETV winல் வெளியாகவுள்ளது. மேலும் No Good deed, La Palma, Red one, Bookie ஆகிய படங்கள் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ ஆகியவற்றில் வெளியாகவுள்ளன. வரும் 13ம் தேதியும் மலையாளம், இந்தி மொழிப் படங்கள் வெளியாகவுள்ளன. மலையாளத்தில் வரவேற்பை பெற்ற போகன்வில்லா படம் சோனி லைவில் வெளியாகவுள்ள நிலையில் mismatched வெப் தொடரின் அடுத்த சீசனும் வெளியாகவுள்ளது. இதையடுத்து ஆங்கிலத்தில் Carry on, 1992, Dahomey, Elton john :never too late, Invisible, Dexter : Original sin, War of the worlds இரண்டாவது சீசன் உள்ளிட்டவையும் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X