veera dheera sooran OTT: விக்ரமின் 'வீர தீர சூரன்' ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் எப்போது தெரியுமா?
சென்னை: சீயான் விக்ரம் நடிப்பில் அருண் குமார் இயக்கத்தில் உருவான 'வீர தீர சூரன்' தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிசில் 66 கோடியை வசூலித்த இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு 'தங்கலான்' படம் வெளியானது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா பெரும் பொருட் செலவில் தயாரித்திருந்தார். பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி திருவோத்து, ப்ரீத்தி கரன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்காக மிகவும் கஷடப்பட்டு, பெரிய உழைப்பை போட்டு நடித்து இருந்தார் விக்ரம். ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 'தங்கலான்' பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெறவில்லை.'

சியான் விக்ரம்: தங்கலான் படத்தை தொடர்ந்து, சித்தார்த் நடிப்பில் வெளியான 'சித்தா' படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்ற அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அருண் குமார், 'வீர தீர சூரன்' இயக்கியுள்ளார். சீயான் விக்ரமின் 62 வது படமாக உருவாகியுள்ளது.முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் 'வீர தீர சூரன்' படத்தினை இயக்கியுள்ளார் அருண் குமார். காளி என்ற ரோலில் விக்ரம் நடித்துள்ள நிலையில், அவருக்கு மனைவியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சமூடு உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து தொடர் தோல்வியை சந்தித்து விக்ரமிற்கு 'வீர தீர சூரன்' படம் ஓரளவிற்கு நல்ல வெற்றியை பெற்றுக்கொடுத்தது. படம் மொத்தம் 66 கோடியை வசூலித்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி இப்படம் வரும் ஏப்ரல் 24ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
வீர தீர சூரன்:மதுரையில் செல்வாக்குமிக்க குடும்பத்தின் தலைவராக இருக்கிறார் பிருத்வி. அவரது மகன் சூரஜ் வெஞ்சரமூடுக்கு ஊர்த் திருவிழாவின்போது ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதே சிக்கலைச் சாக்காக வைத்து அவர்களை என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ள துடிக்கிறார் எஸ்.பியான எஸ்.ஜே. சூர்யா. இதற்காக அந்த ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கும் விக்ரமின் உதவியை நாடுகிறார்.பிருத்வி, சூரஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே. சூர்யா, விக்ரம் இவர்களுக்குள் இருக்கும் முன்பகை என்ன.... எஸ்ஜே சூர்யா ஏன் பெரியவர் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிறார். விக்ரமின் பிளாஷ்பேக் என்ன என்பதே இந்த வீர தீர சூரன் பாகம் இரண்டாம் பாகத்தின் கதை.
அதிரடியான ஆக்ஷன் காட்சிகள், விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்த இந்த படம் தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை பார்த்த தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் படத்தை வெகுவாக பாராட்டி இருந்தார். வழக்கமாக முதல் பாகம் வெளியான பிறகு தான் இரண்டாம் பாகம் வெளியாகும், ஆனால், உலக சினிமா வரலாற்றிலேயே இரண்டாம் பாகம் முதலில் வெளியானது. படத்தின் முதல் பாகம் வெளியீட்டுக்கு தற்போது தயாராக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











