என்னடா இது விஷாலுக்கு வந்த சோதனை.. ஓடிடியில் வெளியானது ரத்னம்

சென்னை: விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ரத்னம். ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் இணைந்த தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டடித்தன. எனவே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உச்சக்கட்டத்தில் ரசிகர்களிடம் இருந்தது. சூழல் இப்படி இருக்க படமானது கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்த சூழலில் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரத்னம் வெளியாகியிருக்கிறது.

செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் கடைசியாக நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்

Vishals Ratnam Streaming on Amazon Prime OTT

செம ரெஸ்பான்ஸ்: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர். குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரனை ஏகத்துக்கும் கொண்டாடினர்

ரத்னம் விஷால்: இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து விஷால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அந்த சூட்டோடு ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை இந்தப் படத்திலும் விஷால் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பாசிட்டிவ் ரிசல்ட்: அந்த எதிர்பார்ப்போடு கடந்த மாதம் ரத்னம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. விஷால் ரசிகர்களும், ஹரியின் ரசிகர்களும் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றனர். படத்தை பார்த்த ரசிகர்கள் ஓரளவுக்கு பாசிட்டிவ்வான விமர்சனத்தையே கொடுத்தனர். வசூல் ரீதியாகவும் டீசண்ட்டான வரவேற்பை பெற்ற படம் ஒருவாரத்தில் 20 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக பாஸ்க் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

அரண்மனை வைத்த ஆப்பு: ஆனால் அவர்களது மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. கடந்த 3ஆம் தேதி வெளியான அரண்மனை 4 ரத்னத்துக்கு இருந்த மவுசை குறைத்துவிட்டது. அரண்மனை 4 குடும்ப ரசிகர்களையும், குழந்தைகளையும் அதிகமாகவே கவர்ந்துவிட்டது. படம் வெளியாகி மூன்று நாட்களிலேயே கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. மக்களும் அரண்மனை 4 பார்க்கவே விரும்புகிறார்கள். இதனால் ரத்னத்தின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக திரையரங்குகளிலிருந்து விலக ஆரம்பித்திருக்கிறது.

ஓடிடியில் ரத்னம் ரிலீஸ்: இந்தச் சூழலில் மே 23ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரத்னம் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன்படி தற்போது ரத்னம் அமேசன் ப்ரைமில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. படம் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் படம் வெளியானதால் விஷாலின் ரசிகர்கள், என்னடா இது நமக்கு வந்த சோதனை என்று சோகத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X