ஃபர்ஹானா சர்ச்சை..? ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் மோகன்தாஸ்... பாவம் லால் சலாம் ஹீரோ

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

இந்தப் படத்திற்கு ஒருசில அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் திரையரங்குகளில் வெளியான போது சர்ச்சையானது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள மோகன் தாஸ் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

 Vishnu Vishal and Aishwarya Rajesh Starrer Mohandas film Is All Set To Direct OTT Release

முரளி கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்துள்ளார்.

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் மோகன்தாஸ்: விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து மோகன்தாஸ் என்ற படத்தில் நடித்துள்ளனர். முரளி கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படம் சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இதில், கருணாகரன், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விஷ்ணு விஷாலே சொந்தமாக தயாரித்துள்ளார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ராட்சசன் திரைப்படம் சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்தது. மோகன்தாஸும் அதேபோன்ற படமாகவே உருவாகியுள்ளதால் தியேட்டரில் ரசிகர்களுக்கு திகில் கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் படம் திரையரங்குகளில் இல்லாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

அதன்படி, மோகன்தாஸ் படத்தின் ஓடிடி ரைட்ஸை ஜியோ சினிமா நிறுவனம் பெற்றுள்ளது. இதுவரை இந்தி மொழி படங்களை வெளியிடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது ஜியோ சினிமா. தற்போது முதன்முறையாக தமிழ்ப் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. திரையரங்குகளிலும் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் ரிலீஸானாலும், தமிழ் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகாத ஜியோ தளத்தில் வெளியாவதால் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 Vishnu Vishal and Aishwarya Rajesh Starrer Mohandas film Is All Set To Direct OTT Release

அதேநேரம் மோகன்தாஸ் படத்தை வெளியிடுவதன் மூலம் தமிழ்த் திரையுலகிலும் ஜியோ சினிமா தனது ஆட்டத்தை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான ஃபர்ஹானா படத்துக்கு ஒருசில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. குறிப்பிட்ட மதத்தை இழிவுப்படுத்தியதாக சர்ச்சை கிளம்பியதால் இப்படி எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள மோகன்தாஸ் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேபோல், விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடிக்கும் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதனிடையே விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் நேரடியாக ஓடிடியில் வெளியாவது, லால் சலாம் படத்துக்கு நெகட்டிவ் ப்ரோமோஷன் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X