தப்பா தொட்டேனா? வாய உடைச்சிடுவேன்.. இப்போத்தான் பொண்ணுனு ஞாபகம் வருதா? பாரு மீது பாய்ந்த கம்ருதீன்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து நேற்று FJ மற்றும் ஆதிரை வெளியேறிய நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் கம்ருதீனுக்கும் பார்வதிக்கும் ஏகப்பட்ட சண்டைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. பார்வதியின் பேச்சால் கடுப்பான கம்ருதீன், ஒரு கட்டத்திற்கு மேல் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், உன்னை நியாயப்படுத்திக் கொள்வதற்காக நீ என்ன வேண்டுமானாலும் செய்வ என்று கோவத்துடன் பேசுகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் ஜோடி போட்டு கொண்டு வீடு முழுக்க சுற்றி வந்தார்கள். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நள்ளிரவில் நாய் குரைத்த போது, பார்வதியும், கம்ருதீனும் டீலக்ஸ் ரூமில் இருந்து வெளியே வந்தார்கள். அவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை எச்சரிக்கத்தான் பிக் பாஸ் நாயை குரைக்க வைத்தார் என இணையத்தில் பலவிதமாக பேச்சுக்கள் எழுந்தது. இதுகுறித்து விஜய்சேதுபதி பேசுவார் என எதிர்பார்த்த நிலையில், அதைப்பற்றி விஜய்சேதுபதி ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒன்றுக்கு உதவாத விஷயங்களை பேசிவிட்டு சென்றார்.

புலம்பியா பார்வதி: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் குடும்ப உறுப்பினர்கள் வர இருக்கின்றனர். இதை நினைத்து ஏற்கனவே பயத்தில் இருந்த பார்வதி, அம்மா வந்தால் என்ன சொல்லுவாங்க என்ன சொல்லிக் கொண்டே இருந்தார். அவர் பயந்தது போல, பார்வதியின் குடும்பத்தினர் தான் பிக் பாஸ் வீட்டில் 24 மணி நேரம் வீட்டில் இருக்க போகிறார்கள்.பெற்றோர் வருவதற்குள் கம்ருதீனுடன் சில விஷயத்தை பேசி சரி செய்து கொள்ளலாம் என நினைத்த பார்வதி, கம்ருதீனிடம் அம்மா வந்தால், நமக்குள்ள என்ன நடந்ததோ அதை சொல்லு, ஏன் என்றால், நான் ஒரு பெண் வெளியில் இந்த விஷயம் எப்படி போய் இருக்கு என தெரியவில்லை என்றார். உடனே கம்ருதீன், இந்த விஷயத்தை இங்கு பேச வேண்டாம். அது பேசுவதற்கான இடம் இது இல்லை. நாம் வெளியில் சென்று இந்த விஷயத்தை பேசலாம். இல்லை நேரடியாகவே உங்களுடைய வீட்டிற்கு வந்து நான் பேசுகிறேன். இதைப்பற்றி இந்த இடத்தில் பேச வேண்டாம் என பலமுறை கூறுகிறார்.
கடுப்பான பார்வதி: ஆனால், பார்வதியை அம்மாவிடம் இது பற்றி பேசிவிடலாம் பேசிவிடலாம் என சொல்லிக் கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான கம்ருதீன் ஏற்கனவே நான் உன்னை தவறாக தொட்டேன் என திவாகரிடம் சொல்லி என்னுடைய மானத்தை வாங்கின. ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் யாரும் தொட முடியாது என கோபத்துடன் கமருதீன் பேசிக்கொண்டே இருந்தார். அப்போது வினோத் மற்றும் அமீர் இவர்களை சமாதானம் செய்து வைத்தனர். அப்போதும் பார்வதி அந்த சூழ்நிலையில் எனக்கு நீ தொட்டது எனக்கு தவறாக தெரிந்தது என சொல்ல கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கம்ருதீன். உன்னுடைய சுயநலத்திற்காக நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்வ, தண்டவாளத்தில் கூட என்னை படுக்க வைத்து விடுவ என்று கத்துகிறார். அப்போது பார்வதி, அப்படி இல்ல பேபி என கொஞ்சலாக சொல்ல, கடுப்பான கம்ருதீன், பேபி சொன்னால் வாயை உடைத்து விடுவேன் என ஆத்திரத்தோடு பேசுகிறார். இணையத்தில் பார்வதி மற்றும் கம்ருதீன் சண்டை தான் பேசும் பொருளாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications











