OTT Release: ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன?

சென்னை: கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்துக்குப் பின் ஓடிடி தளங்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார், ஆஹா, சோனி லைவ், ஜீ5, சன் நெக்ஸ்ட் என பல நிறுவனங்களும் ஓடிடி தளத்தை முன்னெடுத்துள்ளது.

அதன்படி சினிமாவில் சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரையில் நல்ல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்க்கலாம்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் டிசம்பர் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் வசூலை அள்ளிய நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது

What are the films releasing this week on OTT

ஜப்பான்: நடிகர் கார்த்தியின் 75வது படமான ஜப்பான் நவம்பர் 10ந் தேதி வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் மிகவும் மோசமான விமர்சனத்தை பெற்று வசூலில் அடிவாங்கியது. இத்திரைப்படம் வரும் 11ந் தேதி நெட்பிட்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

What are the films releasing this week on OTT

கூச முனுசாமி வீரப்பன்: தீரன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரபாவதி ஆர்.வி. தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் 'கூச முனுசாமி வீரப்பன்'. இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜீ5 ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

What are the films releasing this week on OTT

சமக்(வெப் தொடர்): பஞ்சாபின் இசைத்துறையின் பின்னணியில் 'சமக்' திரைப்பட உருவாகி உள்ளது. ரோஹித் ஜுக்ராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில், சித்தார்த் ஷா, ஜிப்பி கிரேவால் மற்றும் சுவிந்தர் விக்கி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமக் வலைத் தொடர் நாளை SonyLiv இல் வெளியாக உள்ளது.

Maa Oori Polimera 2: மா ஊரி பொலிமேரா 2 படத்தின் கதை தங்கை மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் ஒரு காவல்துறை அதிகாரியின் கதையாகும். சூனியத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை சுற்றி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சத்யம் ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை டிசம்பர் 7ஆம் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

Kadak Singh: கடக் சிங் நிதிக் குற்றத்துறை அதிகாரி ஏ.கே.ஸ்ரீவஸ்தவாவைச் சுற்றியே கதை நகர்கிறது. மறதி நோயால் பாதிக்கப்படும் இவர், மோசடி வழக்கை நிர்வகிக்கிறார். இப்படத்தில், பங்கஜ் திரிபாதி, பார்வதி திருவோத்து மற்றும் சஞ்சனா சங்கி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம், டிசம்பர் 8ந் தேதி Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X