நெட்பிளிக்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு.. Too Hot to Handle S3 முதல் எதெல்லாம் புதுசா வருதுன்னு பாருங்க!

சென்னை: மணி ஹெய்ஸ்ட் முதல் ஸ்குயிட் கேம் வரை சர்வதேச ரசிகர்களை கவர்ந்துள்ள நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இந்த மாதம் ஏகப்பட்ட புதிய என்டர்டெயின்மென்ட்டுகள் ஒடிடி ரசிகர்களை குதூகலப்படுத்த காத்திருக்கின்றன.

லாக்டவுன் காரணமாக பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களும் ஒடிடி பக்கம் சென்று விட்டனர்.

சமீபத்தில் வெளியான மாதவனின் DeCoupled மற்றும் ஆயுஷ்மான் குரானாவின் Chandigarh Kare Aashiqui உள்ளிட்டவை சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்களை சந்தோஷப்படுத்த இந்த மாதம் என்ன என்ன புதிய வரவுகள் வந்துள்ளன என்றும் வரப் போகிறது என்பது குறித்தும் இங்கே பார்ப்போம்.

உயரும் ஒடிடி மார்க்கெட்

உயரும் ஒடிடி மார்க்கெட்

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் உள்ளிட்ட பல துறைகள் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், இந்த சூழ்நிலையில், பெரிய அளவு மார்க்கெட் உயர்ந்துள்ள விஷயங்களில் முக்கியமானதாக ஒடிடி நிறுவனங்கள் உள்ளன். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜி5, சோனி லைவ் என ஏகப்பட்ட ஒடிடி தளங்கள் சர்வதேச ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. உள்ளூர் ஒடிடிக்களும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன.

நெட்பிளிக்ஸின் புது வரவு

நெட்பிளிக்ஸின் புது வரவு

உலகின் பல நாடுகளை ஒரே நேரத்தில் இணைக்கும் ஒடிடி நிறுவனமாக நெட்பிளிக்ஸ் இந்த மார்க்கெட்டில் லீடிங்கில் உள்ளது. அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களின் தி கிரே மேன் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் அளவுக்கு பல ஆயிரம் கோடிகளை சினிமாவில் முதலீடும் செய்து வருகிறது. மாத மாதம் அதன் ரசிகர்களுக்காக ஏகப்பட்ட புதிய வெப் தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் படங்கள் என பலவற்றை ரிலீஸ் செய்து கொண்டே இருக்கிறது நெட்பிளிக்ஸ்.

பிக் பாஸுக்கெல்லாம் பாஸ்

பிக் பாஸுக்கெல்லாம் பாஸ்

இந்த மாதம் நெட்பிளிக்ஸ் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ரியாலிட்டி ஷோவான Too Hot to Handle சீசன் 3 இன்று முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை போல ஒரு வீட்டில் ஆண் பெண் போட்டியாளர்களை அடைக்காமல் ஒரு தீவில் உள்ள ரெசார்ட்டில் அடைத்து வைத்து ஏகப்பட்ட டாஸ்க்குகளை கொடுப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை வெல்ல இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யாரிடமும் கடைசி வரை உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் ட்விஸ்ட்டே! அப்படியென்றால் இந்த ஷோ எவ்வளவு ரொமாண்டிக்காக இருக்கும் என யோசித்துப் பாருங்கள்..

ஒசார்க் சீசன் 4

ஒசார்க் சீசன் 4

நெட்பிளிக்ஸ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒசார்க் வெப் தொடரின் 4வது சீசனின் முதல் பாகம் இந்த மாதம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. மேலும், தி சின்னர் சீசன் 4, ஹோம் டீம், தி ஆர்பிட்டல் சில்ட்ரன், ஆல் ஆஃப் அஸ் ஆர் டெட், சம்மர் ஹீட், தி ராயல் ட்ரீட்மெண்ட், ஹெவன்லி பைட்ஸ் மெக்ஸிகோ, தி பப்பட் மாஸ்டர், டோட்டா உள்ளிட்ட ஏராளமான நெட்பிளிக்ஸ் படைப்புகள் ரசிகர்களை குஷிப்படுத்த காத்திருக்கின்றன.

ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு

ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு

ஸ்போர்ட்ஸ் பிரியர்களையும் குதூகலப்படுத்த வரும் ஜனவரி 26ம் தேதி பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மரின் Neymar: The Perfect Chaos வெளியாகிறது. அதே போல மற்றுமொரு நட்சத்திர கால்பந்தாட்டக்காரரான கிறிஸ்டியானோ ரோனால்டோவின் மனைவி ஜார்ஜியோனாவின் ஐ எம் ஜார்ஜியோனா படைப்பும் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X