Lust Stories 2: ஏது.. எரிமலை போல காமம் வெடிக்குமா?.. தமன்னாவின் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 டிரெய்லர் ரிலீஸ்!
சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தயாரிப்பில் உருவாகி உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜி இந்த மாத இறுதியில் வெளியாகிறது. ஏற்கனவே வெளியான தமன்னாவின் ஜீ கர்தா வெப்சீரிஸே இணையத்தை சூடாக்கி உள்ள நிலையில், அடுத்த ஹாட்டான ஓடிடி ரிலீஸ் வருகிறது.
மூத்த நடிகையான கஜோல், சீதாராமம் ஹீரோயினான மிருணாள் தாகூர் மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஹாட் ஆந்தாலஜி உருவாகி உள்ளது.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களான பால்கி, கொன்கனா சென், சுஜோய் கோஷ் மற்றும் அமித் ரவிந்தர்நாத் ஷர்மா உள்ளிட்டோர் இந்த ஆந்தாலஜியை இயக்கி உள்ளனர்.
எம்மி விருது: கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, புமி பெட்னேகர், ராஜ்குமார் ராவ் உள்ளிட்டோர் நடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.
சர்வதேச விருதான எம்மி விருதுக்கே அந்த ஆந்தாலஜி பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், அதன் இரண்டாம் பாகம் வரும் ஜூன் 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

டாப்லெஸ் தமன்னா: நடிகை தமன்னா தமிழில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நிலையில், இந்தி ஓடிடி படைப்புகளில் எல்லை மீறி நடித்து வருகிறார் என ட்ரோல்கள் பறக்கின்றன.
ஜீ கர்தா வெப்சீரிஸில் படுக்கையறை காட்சிகளில் அரை நிர்வாணமாக தமன்னா நடித்த நிலையில், லஸ்ட் ஸ்டோரீஸிலும் அவரது காதலர் விஜய் வர்மா உடன் தாராளம் காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லஸ்ட் ஸ்டோரீஸ் 2 டிரெய்லர் ரிலீஸ்: ஏற்கனவே லஸ்ட் ஸ்டோரீஸ் 2 டீசர் வெளியான போது டெஸ்ட் டிரைவ் செய்வது போல திருமணத்துக்கு முன்பாகவே மணமக்கள் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது போல இடம்பெற்ற வசனங்கள் ஷாக்கை கிளப்பிய நிலையில், தற்போது லஸ்ட் ஸ்டோரீஸ் 2 டிரெய்லர் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
டாப் ஹீரோயின்களான கஜோல், மிருணாள் தாகூர் மற்றும் தமன்னாவின் தாறுமாறு கவர்ச்சியால் டிரெய்லர் களைகட்டுகிறது.

எரிமலை போல காமம் வெடிக்கும்: Mount Fuji போல இந்த உடல் இருக்கும் என்றும் காமத்தால் எரிமலை போல வெடிக்கும் என அந்த பாட்டி பேசும் வசனங்களை வைத்தே இந்த டிரெய்லரையும் ஓட்டி உள்ளனர்.
நடிகை தமன்னா உடன் உடலுறவு கொள்ள விஜய் வர்மா முயற்சிக்கும் போது, முடியாது நீங்க கல்யாணம் ஆனவர் என்கிற காட்சிகளும், கஜோல் கணவர் வேலைக்காரியை ஆபாசமாக பார்க்கும் காட்சிகளும் டிரெய்லரில் இடம்பெற்று ஷாக்கை கிளப்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











