Banned Movies on OTT: இந்தியாவில் தடை செய்யப்பட்ட டாப் 7 படங்கள்.. எந்த எந்த ஓடிடியில் பார்க்கலாம்!
சென்னை: இறையாண்மை, ஆபாசம், சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் தடை செய்யப்பட்ட 7 படங்களை எந்தவொரு தடையும் இன்றி ஓடிடி தளங்கள் வெளியிட்டுள்ளன.
ஓடிடி தளங்களுக்கு சென்சார் இல்லை என்பதால் நிர்வாணக் காட்சிகளும், தடை செய்யப்பட்ட படங்களும் தாராளமாக ஸ்ட்ரீம் ஆகி வருகின்றன.
இந்நிலையில், கண்டு, அன்ஃப்ரீடம், ஆங்கிரி இந்தியன் காடஸ், ஃபயர் உள்ளிட்ட டாப் 7 தடை செய்யப்பட்ட படங்களை எந்த எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இங்கே விரிவாக பார்ப்போம் வாங்க..

Gandu: கவுசிக் முகர்ஜி இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான கண்டு (Gandu) திரைப்படம் அதிகபட்சமான ஆபாசக் காட்சிகள் மற்றும் நிர்வாணக் காட்சிகள் இடம்பெற்ற நிலையில், இந்தியாவில் ரிலீஸ் செய்யவேக் கூடாது என தடை செய்யப்பட்டது. ரிதுபர்ணா சென், அனுபிரதா பாசு நடிப்பில் உருவான இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

Unfreedom: ஓரினச்சேர்க்கையாளரான இளம் பெண் கட்டாயத் திருமணத்தை எதிர்த்து தனது குடும்பத்துடன் சண்டைப் போட்டு தனது காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்கிற கதையை மையமாக கொண்டு உருவான அன்ஃப்ரீடம் திரைப்படத்தை இயக்குநர் ராஜ் அமித் குமார் 2015ல் இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியானது. இந்தியாவில் அந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்திய ரசிகர்கள் தாராளமாக எந்தவொரு தடையுமின்றி இப்போ பார்க்கலாம்.

Parzania: நசிருதின் ஷா மற்றும் நடிகை சரிகா நடிப்பில் 2007ல் வெளியான பர்ஸானியா திரைப்படத்தில் குஜராத்தில் 2002ல் நடைபெற்ற கலவரத்தை மையமாக கொண்டு இயக்குநர் ராகுல் தொலக்கியா இயக்கி இருந்தார். கலவர சர்ச்சை தொடர்பான படம் என்பதால் இந்த படத்தை அப்போது இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் இருக்கிறது.

Angry Indian Goddess: அம்ரித் மக்ரேலா, பர்வீன் குஜ்ரால், சாரா ஜேன் டயாஸ், சந்தியா மிருதூள், ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே உள்ளிட்ட 5 நடிகைகள் இணைந்து கோவாவுக்கு செல்லும் இடத்தில் நடக்கும் விசித்திரமான சடங்கு தான் இந்த ஆங்கிரி இந்தியன் காடஸ் திரைப்படத்தின் கதை. இயக்குநர் பான் நளின் எழுதி இயக்கிய இந்த படமும் தடை செய்யப்பட்டது. ஆனால், இந்த படத்தை இந்திய ரசிகர்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

Fire: தீபக் மேத்தா இயக்கத்தில் நந்திதா தாஸ், ஷபானா ஆஸ்மி நடிப்பில் 96ம் ஆண்டு ரிலீஸுக்கு தயாரான இந்த படத்தின் கதையும் படத்தை இந்தியாவில் வெளியிட விடாமல் தடுத்தது. யூடியூபிலேயே இந்த படம் காணக்கிடைக்கிறது.

Paanch: இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கிய முதல் திரைப்படமான பாஞ்ச் திரைப்படமும் வெளியாக தடை விதிக்கப்பட்டது. Mubi ஓடிடி தளத்தில் இந்த படத்தை ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

Lipstick under my Burkha: அலங்ரிதா ஸ்ரீவத்சவா இயக்கத்தில் 2016ல் வெளியான லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா திரைப்படம் மத சர்ச்சை காரணமாக இந்தியாவில் வெளியாக முதலில் தடை விதிக்கப்பட்டது. பின்னர் சில இடங்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. அமேசான் ஓடிடி தளத்தில் இந்த படத்தை காணலாம்.


Click it and Unblock the Notifications











