தங்கலான் ஓடிடியில் வெளியாவதில் சிக்கல்.. கறார் காட்டும் நெட்பிளிக்ஸ் .. பின்னணி என்ன?

சென்னை: பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி தியேட்டரில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த படத்தோடு வெளியான அனைத்துப்படங்களும் ஓடிடியில் வெளியாகிவிட்ட நிலையில், 'தங்கலான்' படம் இன்னும் ஓடிடியில் வெளியாகாமல் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே இருக்கிறது.

மணிரத்னம் இயக்கிய வரலாற்று சிறப்பு மிக்க பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரம் 'தங்கலான்' படத்தில் அசாத்தியமான நடிப்பை கொடுத்திருந்தார். விக்ரமிற்கு மனைவியாக நடித்த பார்வதி திருவோத்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், மாளவிகா மோகனன், டேனியல், பசுபதி, வேட்டை முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது.

thangalaan vikram

தங்கலான்: தலித் பூர்வக்குடி மக்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் உருவான கோலார் தங்க வயலின் மறைக்கப்பட்ட வரலாற்றை அழகான கற்பனை கலந்த ஒரு நல்ல திரைப்படமாக கொடுத்து இருந்தார் இயக்குநர் பா.ரஞ்சித். இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகவும் அதிகரிக்க செய்தது. இதையடுத்து படம்

இதையடுத்து படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இரண்டாம் பாதியில் கதை மற்றும் திரைக்கதை சற்று தொய்வாக இருப்பதாக பலரும் விமர்சித்தனர்.

முதல்நாள் வசூல்: எதிர்மறையாக விமர்சனம் வந்த போதும், தங்கலான் படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 15 கோடி வரை வசூல் செய்து, இந்தியா முழுவதும் 13 கோடியும், தமிழகத்தில் மட்டும் 11 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இப்படத்திற்காக இயக்குனர் பா ரஞ்சித்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஓடிடியில் தாமதம்: தங்கலான் திரைப்படத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கி இருக்கும் நிலையில், இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் வெளியானது. ஆனால், படக்குழு, 'தங்கலான்' படத்தின் ஓடிடி பதிப்பினை சொன்ன தேதியில் கொடுக்காமல் தாமதப்படுத்தி உள்ளது. படக்குழு சொன்ன தேதியில் படத்தை தராததால், இதனை வெளியிட முடியாது என ஓடிடி நிறுவனம் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், முன்பு ஒப்புக்கொண்ட விலையில் இப்போது படத்தை வெளியிட முடியாது எனவும், விலையைக் குறைத்தால் மட்டுமே வெளியிட முடியும் எனவும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் படக்குழுவுக்கு நிபந்தனை விதித்திருக்கிறது

கறார் காட்டும் ஓடிடி நிறுவனம்: இதுகுறித்து தங்கலான் படக்குழு ஓடிடி தளத்துடன் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், விரைவில் ஒரு நல்ல முடிவு ஏற்பட்டு, 'தங்கலான்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் இப்படி தொடர்ந்து கறார் காட்டி வந்தால், இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு, மற்ற ஓடிடி நிறுவனங்களிடம் படத்தை கொடுக்க படக்குழு முடிவு செய்து இருப்பதாக சினிமா வட்டாரத்தில் இருந்து செய்தி வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X