Aadujeevitham OTT: ஓடிடியில் வெளியாகாத ஆடுஜீவிதம்.. காரணம் என்ன தெரியுமா?
சென்னை: பிரத்விராஜ் சுகுமாரன் நடித்த ஆடுஜீவிதம் படம் மே 26 டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தயாரிப்பாளரிடமிருந்தோ ஓடிடி நிறுவனத்திடமிருந்தோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், தற்போது வரை படம் ஓடிடியில் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில், நடிகர் பிருத்விராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பிளாக் பஸ்டர் அடித்த திரைப்படம் த கோட் லைஃப் ஆடுஜீவிதம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்ட இப்படத்தில், பிரித்விராஜ், அமலா பால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 28ந் தேதி தியேட்டரில் வெளியான இப்படத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் வெளியானது.

ஆடுஜீவிதம்: வறுமையில் வாடும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நஜீப், தனது மனைவிக்காகவும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதற்காகவும் நண்பர் ஒருவரின் உதவியுடன் அரபுநாட்டுக்கு வேலை தேடி செல்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக பாலை வனத்தில் ஆடு மேய்க்கும் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் நஜீப் பாலைவனத்தில் சிக்கி அணு, அணுவாய் சித்திரவதைக்கு உள்ளாகிறார். கடைசியில் நஜீப் அந்த நரக வாழ்க்கையில் இருந்து மீண்டாரா இல்லையா என்பதுதான் ஆடுஜீவிதம் படத்தின் கதை.
பிரித்விராஜின் அபாரமான நடிப்பு: இப்படத்தில் நஜீப்பாக நடித்திருந்த பிரித்விராஜ் தன் உடலை வருத்தி கடினமான உழைப்பை கொடுத்து நடித்திருந்தார். இந்த படம் நிச்சயம் தேசிய விருதை பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் திரையில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். திரையிட்ட எல்லா இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிய இத்திரைப்படம் உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ஓடிடி: இப்படம் வரும் மே 26 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்றும், அந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளதால், அந்த ஓடிடி தளத்தில் ஒளிபரப்பரப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்காததால், இது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்காருக்கும், சர்வதேச திரைப்பட விழாவிற்கும் அனுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதால், ஓடிடி சாட்டிலைட் உரிமை குறித்த பேச்சு வார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நாயகியாக அமலா பாலும், பிருத்விராஜ் சுகுமாரனும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு மாநிலங்களில் வெளியிட்டது. படத்தில் ஜிம்மி ஜீன் லூயிஸ், ரிக் அபி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை விஷுவல் ரொமான்ஸ் இமேஜ் மேக்கர்ஸ், ஜெட் மீடியா புரொடக்ஷன் மற்றும் அல்டா குளோபல் மீடியா இணைந்து தயாரித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











