Yaathisai OTT: அமேசான் பிரைமில் அசத்தலாக வெளியான யாத்திசை.. சாகுந்தலத்திற்கு அங்கேயும் செம அடி!

சென்னை: சமந்தாவின் சாகுந்தலம் நேற்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான நிலையில், அந்த படத்தை ஓடிடியில் 10 நிமிடங்கள் கூட பார்க்க முடியவில்லை என நெட்டிசன்கள் விளாசி எடுத்தனர்.

இந்நிலையில், யாத்திசை திரைப்படம் அமேசான் பிரைமில் இன்று வெளியான நிலையில், சமந்தாவின் சாகுந்தலத்திற்கு ஓடிடியிலும் பலத்த அடி கிடைத்திருப்பதாக கூறுகின்றனர்.

Yaathisai steaming now on Amazon Prime and blasts Samanthas Shaakuntalam OTT release

இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் நடிப்பில் கம்மி பட்ஜெட்டில் இப்படியொரு பிரம்மாண்ட வரலாற்று படைப்பை கொடுக்க முடியுமா என ரசிகர்கள் பலரும் யாத்திசை படத்தை வியந்து பார்த்து வருகின்றனர்.

வெறும் 7 கோடி பட்ஜெட்டில்: கடந்த மாதம் 21ம் தேதி வெளியான யாத்திசை திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களை அள்ளி வெற்றிநடை போட்டது. வெறும் 7 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த தமிழர்களின் வரலாற்று படமான யாத்திசையை பார்த்த ரசிகர்களும் படத்தை பெரிதளவில் பாராட்டினர்.

இயக்குநர் தரணி ராசேந்திரன் பல ஆராய்ச்சிகளை செய்து பழந்தமிழ் மற்றும் நாகரிகத்தை இந்த படத்தில் எடுத்துக் காட்டியதாக பலரும் பாராட்டினர்.

யாத்திசை படத்தில் லாஜிக்கே இல்லை என்றும் 300 பருத்தி வீரர்கள் படத்தின் காப்பி போல இருந்ததாகவும் விமர்சனங்களும் எழுந்தன.

பொன்னியின் செல்வன் 2 வருகையால் காலி: ஏப்ரல் 21ம் தேதி வெளியான யாத்திசை திரைப்படம் முதல் ஒரு வாரம் மட்டுமே ஓடியது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் பெரிதளவில் வசூல் வேட்டையை அந்த படம் குவிக்கவில்லை.

மேலும், ஏப்ரல் 28ம் தேதி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் பலர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்துக்காக ஏகப்பட்ட தியேட்டர்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், யாத்திசையின் அலை அப்படியே அடங்கிப் போனது.

Yaathisai steaming now on Amazon Prime and blasts Samanthas Shaakuntalam OTT release

யாத்திசை ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில், மே 12ம் தேதி யாத்திசை திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் வெளியானதில் இருந்தே பல லட்சம் ரசிகர்கள் அமேசான் பிரைமில் யாத்திசை படத்தை பார்த்து வருகின்றனர்.

யாத்திசை படம் ஓடிடியில் வெளியான நிலையில், சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு பலத்த அடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Yaathisai steaming now on Amazon Prime and blasts Samanthas Shaakuntalam OTT release

சாகுந்தலம் படத்திற்கு செம அடி: சக்தி மித்ரன், சேயோன், ராஜலக்‌ஷ்மி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியான யாத்திசை படம் அமேசான் பிரைம் ஓடிடியில் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதே நேரத்தில் சமந்தாவின் சாகுந்தலம் படமும் நேற்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது. ஆனால், 10 நிமிஷம் கூட அந்த படத்தை பார்க்க முடியவில்லை. அவ்வளவு செயற்கைத் தனமாக உள்ளது என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். இந்நிலையில், சாகுந்தலம் படம் ஓடிடியில் அடி வாங்கிய நிலையில், யாத்திசை ஓடிடியில் ஏகப்பட்ட ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X