தளபதி விஜயின் கோட் படத்தை பின்னுக்கு தள்ளிய தூம் தாம்..ஓடிடியில் சாதனை..அப்படி படத்தில் என்ன இருக்கு!
சென்னை: திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு நகைச்சுவைத் திரைப்படம் தான் தூம் தாம். இப்படம் பிப்ரவரி 14 நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் யாமி கெளதம், பிரதிக் காந்தி, ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஓடிடியில் வெளியான முதல் வாரத்திலேயே அதிக பார்வையாளர்களை கவர்ந்து சாதனைப்படைத்துள்ளது.
ரிஷப் சேத் இயக்கிய இந்த படத்தில் கோயல் (யாமி) மற்றும் வீர் (பிரதிக்) இருவரும் திருமணம் செய்து கொண்டு , ஒரு ஓட்டல் அறையில் இருக்கின்றனர். அந்த ஓட்டல் அறைக்குள் வரும் மர்ம நபர்கள், பிரதிக் நெற்றியில் துப்பாக்கியை வைத்து, சார்லி எஙகே என்று கேட்டு துப்பாக்கியுடன் மிரட்டுகின்றனர். சார்லி யார்.. சார்லி எங்கே என்பதை நகைச்சுவை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் இயக்குநர்.

தூம் தாம் நகைக்சுவை படம்: துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர், அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படங்கள் தான் இந்த ஆண்டில் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக இருந்த நிலையில், தூம் தாம் திரைப்படம் மூன்றாவது அதிகம் பார்க்கப்பட்ட படமாக மாறியுள்ளது. இப்படத்தை முதல் வாரத்தில் 4.1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். மேலும், இப்படம் உலகம் முழுவதும் முதல் பத்து இடத்தை பிடித்த இப்படம், கடந்த வாரத்தில் ஐந்து நாடுகளில் நம்பர் 1 அந்தஸ்தை தக்க வைத்துள்ளது.

சாதனை படைத்த படம்: இதற்கு முன் யாமி கௌதம் நடித்த சோர் நிகல் கே பாகாவும் OTT பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படமாக இருந்தது. இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் 30 மில்லியன் பார்வைகளைப் பெற்று அதிகம் பார்க்கப்பட்ட ஹிந்தித் திரைப்படமாக இருந்தது. அதே போல, அக்ஷய் குமாரின் கேல் கேல் மெய்ன் படத்தை 4 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தனர். தளபதி விஜய்யின் தி கோட் படத்தை 3.8 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருந்த நிலையில், யாமி கெளதம் மற்றும் பிரதிக் காந்தி நடித்த தூம் தாம் திரைப்படம் அதை முறியடித்து, முதல் வாரத்திலேயே அதிகம் பார்க்கப்பட்ட இந்திப்படமாக உள்ளது. யாமி கௌதம் அதிக ரசிகர்களை கவர்ந்த நடிகராக இருக்கிறார். இவர் நடித்த சோர் நிகல் கே பாகா கூட பல நாடுகளின் முதல் 10 பட்டியலில் இருந்தது. அதற்கு காரணம் யாமி, தனக்கு தகுந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.



Click it and Unblock the Notifications











