Year in Search 2024: ஓடிடியை அதிரவிட்ட டாப் 10 சர்ச் லிஸ்ட்.. ஒரு தமிழ் சீரீஸ்கூட இல்லையேப்பா!

சென்னை: இந்த ஆண்டின் இறுதி மாதத்திற்கு வந்துவிட்டோம். பலரும் இப்போதே அடுத்த ஆண்டுக்கான திட்டங்களை வகுக்கத் தொடங்கிவிட்டனர். இந்த ஆண்டில் அதிகம் கூகுளில் தேடப்பட்ட படங்கள் தொடங்கி, பிரபலங்கள், பாடல்கள் என பல லிஸ்ட்கள் தினமும் வந்து கொண்டே உள்ளது. இப்படியான நிலையில் இந்த ஆண்டில் அதிகம் ஓடிடி தளங்களில் தேடப்பட்ட படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

year in search 2024 mirzapur ott panchayat queen of tears

1. Heeramandi: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு இருக்கும் இந்த Heeramandi வெப் சீரீஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற வெப் சீரீஸ். இது விலைமாந்தர்கள் குறித்தும், அவர்கள் இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் எப்படி நடத்தப்பட்டார்கள், எப்படி இருந்தார்கள் என்பது குறித்தும் இந்த வெப் சீரீஸ் பேசுகின்றது. இந்திய அளவில் ஓடிடி தளங்களில் அதிகம் தேடப்பட்ட வெப் சீரீஸாக இந்த வெப் சீரீஸ் உள்ளது.

year in search 2024 mirzapur ott panchayat queen of tears

2. Mirzapur : கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் டீவி சீரீஸ் தான் மிர்ஸாபூர். இதுவரை மூன்று சீசன்களும் 29 எப்பிசோட்களும் வந்துள்ளது. இந்திய அளவில் அதிகம் ஓடிடி தளத்தில் தேடப்பட்டதில் இரண்டாவது இடத்தில் மிர்ஸாபூர் உள்ளது. இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

year in search 2024 mirzapur ott panchayat queen of tears

3. Last Of Us: ஜியோ பிரீமியம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிவரும் இந்த Last Of Us டீவி சீரீஸ்க்கு இந்தியாவில் ரசிகர்கள் இருப்பது என்பது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஹாலிவுட் டீவி சீரீஸான இந்த டீவி சீரீஸின் இரண்டாவது சீசன் இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

year in search 2024 mirzapur ott panchayat queen of tears

4. Bigg Boss 17: ஹிந்தி பிக்பாஸ் சீசன் 17 இந்த ஆண்டில் அதிகம் ஓடிடி தளத்தில் தேடப்பட்ட நிகழ்ச்சிகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக, முனாவர் ஃபரூக்கி ஆனார். கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் முடிந்தது. மொத்தம் 105 நாட்கள் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. இது ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது.

year in search 2024 mirzapur ott panchayat queen of tears

5. Panchayat : அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு இருக்கக்கூடிய ஆட்டகாசமான வெப் சீரீஸ் Panchayat . இந்த சீரீஸ் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு தலைவெட்டியான் பாளையம் என்ற பெயரில் வெளியானது. Panchayat வெப் சீரீஸ்க்கு இந்தியா முழுவதுமே ரசிகர்கள் உள்ளார்கள். இந்தியாவில் ஓடிடி தளத்தில் அதிகம் தேடப்பட்ட நிகழ்ச்சிகளில் 5வது இடத்தில் இது உள்ளது.

year in search 2024 mirzapur ott panchayat queen of tears

6. Queen of Tears : இது ஒரு கொரியன் வெப் சீரீஸ் ஆகும். முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காதல் கதையை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரீஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது. இந்தியாவில் ஓடிடி தளத்தில் அதிகம் தேடப்பட்ட நிகழ்ச்சிகளில் 6வது இடத்தில் இது உள்ளது.

7. Marry My Husband : இதுவும் ஒரு கொரியன் டீவி சீரீஸ். இது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது. இது அட்டகாசமான ரொமாண்டிக் டிராமா என்பதால் உலகம் முழுவதுமே இந்த சீரீஸ்க்கு ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் ஓடிடி தளத்தில் அதிகம் தேடப்பட்ட நிகழ்ச்சிகளில் 7வது இடத்தில் இது உள்ளது.

8. Kota Factory : மொத்தம் மூன்று சீசன் 15 எபிசோட்களைக் கொண்ட வெப் சீரீஸ்தான் Kota Factory . இது மருத்துவக் கனவோடு வரும் ஒரு மாணவனின் முயற்சிகளை மைய்யப்படுத்தியது. இந்த வெப் சீரீஸ் இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள நடுத்தர மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்தது. மேலும் கல்விதான் வெற்றி பெறச்செய்யும் என உணர்த்தும் வெப் சீரீஸ். இந்தியாவில் ஓடிடி தளத்தில் அதிகம் தேடப்பட்ட நிகழ்ச்சிகளில் 8வது இடத்தில் இது உள்ளது.

year in search 2024 mirzapur ott panchayat queen of tears

9. Bigg Boss 18 : தற்போது ஸ்ட்ரீம் ஆகி வரும் பிக்பாஸ் இந்தி சீசன் 18 இந்த ஆண்டில், ஓடிடி தளத்தில் அதிகம் தேடப்பட்ட நிகழ்ச்சிகளில் 9வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் முதல் முறையாக தமிழ்நாட்டினைச் சேர்ந்த போட்டியாளர் ஸ்ருதிகா கலந்து கொண்டுள்ளார். இவர் டாப் 3 இடங்களில் வருவார் என்பதால், தமிழ்நாட்டிலும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் உள்ளனர்.

10. 3 Body Problem: இது ஒரு ஹாலிவுட் டீவி சீரீஸ் ஆகும். நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இது ஸ்ட்ரீம் ஆகின்றது. அறிவியலை மைய்யப்படுத்திய கதைகளத்தைக் கொண்ட டீவி சீரீஸ்தான் இந்த 3 Body Problem. இது இந்தியாவில் அதிகம் ஓடிடி தளத்தில் தேடப்பட்ட நிகழ்ச்சிகளில் 10வது இடத்தில் உள்ளது.

More from Filmibeat

Read more about: mirzapur panchayat
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X