யோகி பாபுவின் சட்னி சாம்பார்! நாளை ஓடிடியில் ரிலீஸ்! குடும்பத்தோடு பார்க்கலாம்!

சென்னை: நகைச்சுவை நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நாளை முதல் அதாவது ஜூலை 26ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள வெப் சீரிஸ் சட்னி சாம்பார். இந்த வெப் சீரிஸை இயக்குநர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இதன் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் யோகி பாபுவுடன் நிழல்கள் ரவி, வாணிபோஜன், மைனா நந்தினி, சந்திரன், நிதின் சத்யா, இளங்கோ குமரவேல் காயத்ரி ஷான், தீபா, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

மிகவும் நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் டீசரை இதுவரை யூட்டூப்பில் மட்டும் கிட்டத்தட்ட 4 மில்லியன்களுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதேபோல் இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது. அதனை இதுவரை 3.4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

Yogi Babu Disney Hotstar

டீசரும் ட்ரைலரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் வெப் சீரிஸ்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என சட்னி சாம்பார் குழுவினர் நம்பிக் கொண்டு உள்ளனர். நாளை தனுஷ்ஷின் 50வது படமான ராயன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதேநேரத்தில் சட்னி சாம்பார் வெப் சீரிஸும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகின்றது.

Yogi Babu Disney Hotstar

கதை இதுவா?: டீசர் மற்றும் ட்ரைலரை வைத்துப் பார்க்கும்போது, இதில், நிழல்கள் ரவியின் மகனாக யோகிபாபு நடித்துள்ளார். நிழல்கள் ரவியின் முதல் மனைவிக்கு பிறந்தவர் யோகிபாபு. இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் சந்திரன் மற்றும் மைனா நந்தினி. நிழல்கள் ரவியின் இறுதி ஆசையாக யோகி பாபுவைச் சந்திக்க வேண்டும் என ஆசைப்படுகின்றார். மேலும் அனைவரும் ஒன்றாக வாழவேண்டும் எனவும் ஆசைப் படுகின்றார். இதனால் யோகிபாபுவை அழைத்து வரும் வேலையில் சந்திரன் களமிறங்குகின்றார். இறுதியில் என்ன ஆனது என்பது மீதிக்கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

Yogi Babu Disney Hotstar

ஒளிப்பதிவு: முழுக்க முழுக்க நகைச்சுவைக் காட்சிகளால் வெப் சீரிஸ் அமைக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த வெப் சீரிஸாக இருக்கும் என சட்னி சாம்பார் குழுவினர் கூறிவருகின்றனர். சட்னி-சாம்பாருக்கு ஒளிப்பதிவு செய்தவர் பிரசன்னா குமார், பிச்சைக்காரன் மற்றும் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர் இவர்.

Yogi Babu Disney Hotstar

வேல்ஸ்: இந்த வெப் தொடருக்கு இசையமைத்தவர் அஜேஷ் அசோக், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று புகழ் பெற்றார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த வெப் சீரீஸை தயாரித்துள்ளது. எழுத்தாளர் பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார், ஜிஜேந்திரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Yogi Babu Disney Hotstar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X