Thookudurai movie: காதல் டூ ஹாரர்.. யோகிபாபு நடிப்பில் தூக்குதுரை.. ஓடிடியில் இன்று ரிலீஸ்!
சென்னை: நடிகர் யோகி பாபு காமெடியனாக மட்டுமில்லாமல் கேரக்டர் ரோல்களிலும் ஹீரோவாகவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் ஹீரோவாக நடித்து கடந்த ஜனவரியில் வெளியான தூக்குதுரை படம் காதல் படமாக துவங்கி தொடர்ந்து ஹாரர் படமாக ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தில் சிறிது நேரத்திலேயே யோகி பாபு கொல்லப்படும் நிலையில் அவர் பேயாக தன்னுடைய ஊர் மக்களுக்கு என்ன செய்கிறார் என்பதை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படம் அமேசான் பிரைமில் ரிலீசாக உள்ளது.
ஹாரர் படம் என்றாலே அதற்கு தனிப்பட்ட ரசிகர்கள் காணப்படும் நிலையில் தியேட்டர்களில் ரசிகர்களை கவரத் தவறிய தூக்குதுரை திரைப்படம் ஓடிடியில் ஏராளமான ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைந்த நடிகர் மாரிமுத்துவும் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. யோகி பாபுவின் காதலியாக இனியா இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் படத்தில் கோயில் கிரீடத்தை திருடும் மகேஷ், பால சரவணன், சென்ராயன் ஆகியோர் படும் பாடுகளை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படம் ஓடிடியில் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

தூக்குதுரை படம்: ட்ரிப் படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த டென்னிஸ் மஞ்சுநாத் மீண்டும் யோகிபாபுவுடன் கூட்டணி சேர்ந்து கடந்த ஜனவரியில் வெளியான படம் தூக்குதுரை. படத்தில் யோகிபாபு, இனியா, மகேஷ், பால சரவணன், சென்றாயன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் காதல், சென்டிமென்ட், ஆக்சன், ஹாரர் கலந்து வெளியாகி ஏராளமான ரசிகர்களின் கவனத்தை பெற்றது தூக்குதுரை. ஆயினும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் நல்ல கதையை கையில் எடுத்த போதிலும் திரைக்கதையில் சொதப்பியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
காதல் டூ ஹாரர் படம்: பணக்கார வீட்டுப் பெண்ணான இனியா கோயில் திருவிழாக்களில் சினிமா படம் போட்டுக் காட்டும் யோகி பாபு மீது காதல் கொள்கிறார். இருவரும் வீட்டை விட்டு ஓடுகின்றனர். அப்போது இனியாவின் அப்பாவிற்கு நெருக்கமானவர்கள் இவர்களை பிடித்து யோகி பாபுவை கிணற்றில் தள்ளிவிட்டு எரித்துக் கொல்கின்றனர். இதனால் பேயாக மாறி அந்த கிராமத்தினருக்கு தொந்தரவு கொடுக்கிறார் யோகிபாபு. இந்த சம்பவத்தின் போது கோயிலுக்கு சொந்தமான விலை மதிப்பில்லாத தங்க கிரீடம் மாயமாகிறது. இந்த கதைக்களத்தை கையில் கொண்டு டென்னிஸ் மஞ்சுநாத் இந்த படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார்.
பேயாக யோகி பாபு: டத்தின் துவக்கத்தில் சிறிது நேரம் மற்றும் இறுதியில் சிறிது நேரம் என குறைவான காட்சிகளிலேயே யோகி பாபு நடித்திருந்தார். இருந்தபோதிலும் அவர் தன்னுடைய கேரக்டருக்கு சிறப்பை சேர்க்கும் வகையில் தன்னுடைய நடிப்பை அளித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடித்திருந்த இனியாவும் பணக்கார வீட்டுப் பெண் என்ற கெத்தை காட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரது நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தது. நண்பர்களாக மகேஷ், பால சரவணன் மற்றும் சென்ராயன் ஆகியோர் இந்தப் படத்தை தங்களது தோள்களில் சுமந்துள்ளனர்.
தரமான ஒளிப்பதிவு: ஹாரர் படத்திற்கே உரித்தான அரண்மனை பங்களா, கிணறு, இரவு நேர சேஸிங் காட்சிகள் உள்ளிட்டவற்றை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மா. இதனிடையே இந்தப் படம் இன்றைய தினம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக பெறத்தவறிய தூக்குதுரை ஓடிடியில் ஏராளமான ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைந்த நடிகர் மாரிமுத்துவும் சிறப்பான கேரக்டரில் நாயகிக்கு அப்பாவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரிப் பட இயக்குநர்: முன்னதாக அட்வென்ச்சர் திரில்லர் படமான ட்ரிப் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத், இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. படம் மூன்று வெவ்வேறு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் இந்த படத்தின் கதை நடக்கிறது. ஆயினும் படத்தின் திரைக்கதையை இன்னும் ஷார்ப் செய்து வெளியிட்டிருந்தால் ரசிகர்களை இன்னும் சிறப்பாக இந்த படம் கவர்ந்திருக்கும் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











