Manorathangal Review: கமல்ஹாசனால் சொதப்பிய மனோரதங்கள்.. என்ன ஆண்டவரே இப்படி செஞ்சுட்டீங்க!

திருவனந்தபுரம்: மலையாளத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆனாலே தென்னிந்திய சினிமா மிகவும் உன்னிப்பாக கவனிக்கும், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள சினிமா ரசிகர்கள் மலையாளப்படங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இப்படியான நிலையில் மலையாளத்தில் ஒரு வெப் சீரிஸ் ரிலீஸ் ஆனாலுமே ரசிகர்கள் விட்டுவைப்பதில்லை. இன்று அதாவது ஆகஸ்ட் 16ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ள வெப் சீரிஸ் மனோரதங்கள். இந்த வெப் சீரிஸ் ஆந்தாலஜி வெப் சீரிஸாக வெளியாகியுள்ளது.

மொத்தம் ஒன்பது எப்பிசோட்களாக இந்த ஆந்தாலஜி வெப் சீரிஸ் வெளிவந்துள்ளது. இந்த ஒன்பது கதைகளும் மறைந்த மற்றும் மலையாளத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் டி.எம். வாசுதேவ நாயரின் சிறுகதைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒளவும் தீர்வும், கடுக்கண்ணாவா, காட்சி, ஷிலாஷிகிதம், வில்பனா, ஷெர்லாக், கடல் காட்டு, அபயம் தேடி வீண்டும், சொர்க்கம் துறக்கும் சமயம் என மொத்தம் ஒன்பது எப்பிசோட்கள் உள்ளன.

Manorathangal Manorathangal Review OTT 5

5 மொழிகள்: மோகன்லால், மம்முட்டி , ஃபகத் பாசில் , பார்வதி திருவோத்து, ஆசிப் அலி, பிஜு மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மொத்தம் எட்டு இயக்குநர்கள் இணைந்து இந்த 9 வெப் தொடரை இயக்கியுள்ளனர். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல், ஒளவும் தீரவும் எப்பிசோடில் மோகன்லால் நடித்துள்ளார், அதைத் தொடர்ந்து மம்முட்டியின் 'கடுகண்ணவா' மற்றும் பார்வதி திருவோத்தின் 'காட்சி' உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இந்த ஆந்தாலஜி வெப் சீரிஸுடன் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் நேரடியாக உருவாக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது.

Manorathangal Manorathangal Review OTT 5

நடிகர்கள்: கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, மது, நெடுமுடி வேணு, ஃபஹத் பாசில், பிஜு மேனன், நதியா மொய்டு, பார்வதி திருவோத்து, இந்திரஜித், அபர்ணா பாலமுரளி, ஆசிப் அலி, ஹரிஷ் உத்தமன், சாந்தி கிருஷ்ணா, ஜாய் மேத்யூ, கைலாஷ், இந்திரன், கைலாஷ், இந்திரா, ரென்ஜி பணிக்கர், சுரபி லக்ஷ்மி, சித்திக், இஷித் யாமினி, மற்றும், நசீர் சம்ஸ்க்ராந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Manorathangal Manorathangal Review OTT 5

கமல்ஹாசன்: இதில் கமல்ஹாசன் தனியாக ஒரு எப்பிசோடில் நடிக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு எப்பிசோடின் தொடக்கத்திலும் அடுத்து வரும் எப்பிசோடிற்கு அறிமுகம் கொடுக்கின்றார். இது ரசிகர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

Manorathangal Manorathangal Review OTT 5

மேலும் இது இந்த ஆந்தாலஜி வெப் தொடரில் எந்தவிதமான நல்லபடியான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒன்பது எப்பிசோட்களில் ஒருசில எப்பிசோட்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஒரு சில எப்பிசோட்கள் பெரிதாக எடுபடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X