"நம்ம மொழி நம்ம கதைகள்".. புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !

சென்னை: முன்பெல்லாம் தியேட்டரில் ஒரு படத்தை பார்க்காமல் விட்டுவிட்டால், அடுத்து அந்த படத்தை பார்க்க வருட கணக்கில் காத்து இருக்க வேண்டும். ஆனால், ஓடிடியில் நினைத்த நேரத்தில் எந்த திரைப்படத்தை வேண்டுமானாலும், எந்த நிகழ்ச்சியை வேண்டுமானாலும் பார்க்கலாம். இதனால், ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்து, வாரா வாரம் புது புது படங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ZEE5 ஓடிடி தளத்தில் பல மொழிகளில் திரைப்படம், வெப் சீரிஸ், கேம்ஷோ என பலவற்றை வெளியிட்டு வருகிறது. தற்போது, ZEE5 ஓடிடி தளம், புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் வந்துள்ளது.

ZEE5 ஓடிடி தளம், ஜூன் 7ந் தேதி முதல், முக்கியமான மாற்றத்தை அறிவித்து, "நம்ம மொழி நம்ம கதைகள்" எனும் வாக்குறுதியுடன், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நெடுங்கதைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், ZEE5 புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய மாற்றத்தில், மொழியை மையப்படுத்திய பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மொழிக்குமான பிளான்கள் தனித்தனியாக உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் சப்ஸ்கிரிப்ஷன் பிளான்கள் கொண்டுவரப்பட்டு ₹120 முதல் மாதம் சந்தா தொடங்குகிறது. இந்தி, பஞ்சாபி மற்றும் போஜ்புரி உள்ளிட்டவற்றுக்கு மாதம் 220 ரூபாயும், All Access Packக்கு மாதம் 320 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களுக்கும் வருடாந்திர சலுகை கட்டணமும் உள்ளது.

ZEE5 New logo OTT 5 OTT
Photo Credit:

புதிய மாற்றங்களுடன்: மேலும், 2025 -26 நிதியாண்டில், 130க்கும் மேற்பட்ட புதிய சீரிஸ், புதிய திரைப்படங்கள், நான்பிக்சன் மற்றும் லைவ் நிகழ்ச்சிகள் பல மொழிகளில் வர உள்ளது. இதில் வரவிருக்கும் முக்கியமான வெப்தொடர்கள், Detective Sherdil, Chhal Kapat: The Deception, சட்டமும் நீதியும், Mothubaru Love Story போன்ற தொடர்கள் விரைவில் வெளியாக உள்ளன. இதுகுறித்து ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் தலைவர் அமித் கோயங்கா பேசுகையில், மொழிக்கு முதன்மையான தளமாக மாறுவதற்கான எங்கள் பயணத்தில் புதிய பிராண்ட் அடையாளம் ஒரு முக்கிய படியாக இருக்கும். கலாச்சார ரீதியாக பொருத்தமான கதைசொல்லல் மூலம் ரசிகர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க முடியும் என நம்புகிறோம்

நம்ம மொழி நம்ம கதை: ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை அதிகாரி கார்த்திக் மகாதேவ் கூறுகையில்.., "நம்ம மொழி நம்ம கதைகள்" என்ற வாசகத்துடன் கூடிய எங்கள் பிராண்ட் பிரச்சாரம், மொழி அடிப்படையிலானது, உங்கள் மொழியில் சொல்லப்படும் கதையை அதை வெறும் கதையாக பார்க்காமல், அதை வாழ்ந்தது போல உணர வைப்பது தான் எங்கள் நோக்கம். 7 மொழிகளில் வடிவமைக்கப்பட்ட இந்த பன்மொழி பிரச்சாரம், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் உட்பட பெரிய மற்றும் சிறிய நகரங்களின் கலாச்சாரத்துடன் எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

அதைத்தொடர்ந்த, ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை உள்ளடக்க அதிகாரி ராகவேந்திரா ஹுன்சூர், வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட மொழி சார்ந்த பார்வையாளர்களுக்குச் சேவை செய்வதில், நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அவர்களின் யதார்த்தங்கள், அவர்களின் மொழிகள் மற்றும் அவர்களின் அன்றாட கதைகளில் இணைந்து, நாங்கள் எதை உருவாக்குகிறோம் என்பதை மட்டுமல்ல - யாருக்காக உருவாக்குகிறோம் என்பதையும் இதில் விரிவுபடுத்தியுள்ளோம். அது நீண்ட வடிவ ஒரிஜினல் கதைகள், குறுகிய வடிவ கதைகள் அல்லது சோதனை வடிவங்கள் என எதுவாக இருந்தாலும், பார்வையாளர்களை அவர்களின் மொழிகளில் மகிழ்விப்பதே எங்கள் குறிக்கோள் என்றார்.

Read more about: zee5 ஜீ5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X