twitter
    bredcrumb

    என்னது...கீர்த்தி சுரேஷிற்கு கல்யாணமா?...போட்டோஷுட்டே நடத்திட்டாரே

    By Mohana Priya
    | Published: Thursday, June 30, 2022, 12:35 [IST]
    திருமண உடையில் போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டதால் கீர்த்தி சுரேஷிற்கு கல்யாணமா...மாப்பிள்ளை யாரு...எதற்கு இந்த திடீரென வெட்டிங் போட்டோஷுட் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
    என்னது...கீர்த்தி சுரேஷிற்கு கல்யாணமா?...போட்டோஷுட்டே நடத்திட்டாரே
    1/15
    இந்திய அளவில் பாப்புலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாள ஆகிய மொழிகளில் வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். டாப் ஹீரோயின் லிட்டிலும் கீர்த்தி இடம்பிடித்துள்ளார்.
    என்னது...கீர்த்தி சுரேஷிற்கு கல்யாணமா?...போட்டோஷுட்டே நடத்திட்டாரே
    2/15
    பைலட்ஸ் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார், மற்றும் தமிழ் நடிகை மேனகாவின் மகள் ஆவார். 2000 ம் ஆண்டுகளில் மலையாளத்தில் பிரபல குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார்.
    என்னது...கீர்த்தி சுரேஷிற்கு கல்யாணமா?...போட்டோஷுட்டே நடத்திட்டாரே
    3/15
    பிறகு படிப்பில் கவனம் செலுத்துவதற்காக சினிமாவிற்கு பிரேக் விட்டார். ஃபேஷன் டிசைனிங் முடித்த கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில், 2015 ல் ரஜினி முருகன் படத்தில் நடித்தார்.
    என்னது...கீர்த்தி சுரேஷிற்கு கல்யாணமா?...போட்டோஷுட்டே நடத்திட்டாரே
    4/15
    ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா என தமிழில் இவர் நடித்த படங்கள் வரிசையா ஹிட் ஆக ஆரம்பித்தன. தெலுங்கிலும் பல படங்களில் நடிக்க வரிசையாக வாய்ப்புக்கள் குவிய துவங்கி விட்டது.
    என்னது...கீர்த்தி சுரேஷிற்கு கல்யாணமா?...போட்டோஷுட்டே நடத்திட்டாரே
    5/15
    தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் எடுக்கப்பட்ட நடிகை சாவித்ரியின் பயோபிக்கில் சாவித்ரியின் ரோலில் நடித்தார். இந்த படத்தின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. 
    என்னது...கீர்த்தி சுரேஷிற்கு கல்யாணமா?...போட்டோஷுட்டே நடத்திட்டாரே
    6/15
    இதற்கு பிறகு பல படங்களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தார். சென்டிமென்ட் ரோல்களும், அழுத்தமான ரோல்களும் கிடைத்தன. பல டாப் ஹீரோ படங்களில் நடித்து, பேசப்படும் நடிகையாக வலம் வந்தார் கீர்த்தி சுரேஷ்.
    என்னது...கீர்த்தி சுரேஷிற்கு கல்யாணமா?...போட்டோஷுட்டே நடத்திட்டாரே
    7/15
    குண்டாக இருந்த கீர்த்தி சுரேஷ், திடரென சிலிம் தோற்றத்திற்கு மாறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். ஸ்லிம்மான பிறகு கிளாமர் உடைகளில் இவர் போட்டோஷுட் நடத்துவது அதிகரித்து விட்டது. 
    என்னது...கீர்த்தி சுரேஷிற்கு கல்யாணமா?...போட்டோஷுட்டே நடத்திட்டாரே
    8/15
    சமீப காலமாக கீர்த்தி நடிக்கும் படங்கள் அனைத்து வரிசையாக தோல்வி அடைந்து வருகின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் அனைத்தும் இப்படி தோல்வி படமாக அமைவதால் கீர்த்தி ரொம்ப அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
    என்னது...கீர்த்தி சுரேஷிற்கு கல்யாணமா?...போட்டோஷுட்டே நடத்திட்டாரே
    9/15
    தற்போது தமிழில் மாமன்னன், தெலுங்கில் தசரா, போலா சங்கர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  ஸ்லிம்மான பிறகு பட வாய்ப்புக்கள் அதிகரிக்கும், படங்கள் தொடர் ஹிட்டாகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கைவசம் 3 படங்கள் மட்டுமே வைத்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X