twitter
    bredcrumb

    ரெண்டுல எது அழகு...இப்படி மயங்க வைக்கிறியேம்மா மகிமா

    By Mohana Priya
    | Updated: Thursday, June 30, 2022, 21:03 [IST]
    கண்ணாடியில் சாய்ந்த படி மகிமா நம்பியார் வெளியிட்டுள்ள அழகிய போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் சொக்கி போய் உள்ளனர். எது நிஜம், எது நிழல் என புரியாமல் வாவ் என வாய் பிளந்து பார்த்து வருகின்றனர். 
    ரெண்டுல எது அழகு...இப்படி மயங்க வைக்கிறியேம்மா மகிமா
    1/10
    தமிழ், மலையாள சினிமா நடிகையான மகிமா நம்பியார், தமிழில் சாட்டை படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு குற்றம் 23, கொடிவீரன், மகாமுனி, அசுரகுரு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
    ரெண்டுல எது அழகு...இப்படி மயங்க வைக்கிறியேம்மா மகிமா
    2/10
    சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த ஐங்கரன், ஓ மை டாக் ஆகிய படங்கள் செம வரவேற்வை பெற்றன. சாந்தமான முகம், க்யூட்டான எஸ்பிரஷன், அலட்டல் இல்லாத நடிப்பில் அழகு தேவதையாய் வந்து ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    ரெண்டுல எது அழகு...இப்படி மயங்க வைக்கிறியேம்மா மகிமா
    3/10
    தற்போது தமிழில் ரதம், மலையாளத்தில் ஒரு படம் என நடித்து வருகிறார் மகிமா. சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த குண்டுமல்லி மியூசிக் வீடியோவில் மகிமாவின் அழகை பார்த்து மயங்காதவர்களே இருக்க முடியாது. 
    ரெண்டுல எது அழகு...இப்படி மயங்க வைக்கிறியேம்மா மகிமா
    4/10
    கேரளாவை சேர்ந்தவரான மகிமா நம்பியார், கிளாசிக்கல் நடனம் மற்றும் கிளாசிக்கல் இசை பயின்றவர். தனது 15வது வயதில் மலையாளத்தில் Kaaryasthan என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தார். முதல் படத்திலேயே திலீப்பிற்கு தங்கையாக நடித்தார்.
    ரெண்டுல எது அழகு...இப்படி மயங்க வைக்கிறியேம்மா மகிமா
    5/10
    தமிழில் வெளியான சிந்து சமவெளி படத்தில் அமலாபால் நடித்த ரோலில் நடிக்க  முதலில் மகிமா நம்பியாரிடம் தான் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் சில தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த படத்தில் நடிக்க மகிமா மறுத்து விட்டார். இதனால் தான் அந்த ரோலில் பிறகு அமலாபாலை நடிக்க வைத்துள்ளனர்.
    ரெண்டுல எது அழகு...இப்படி மயங்க வைக்கிறியேம்மா மகிமா
    6/10
    அதே தயாரிப்பு நிறுவனம் சாட்டை படத்தில் நடிக்க மகிமாவின் பெயரை பரிந்துரை செய்தது. சாட்டை படத்தில் நடித்த போது மகிமா பனிரெண்டாம் வகுப்பு தான் படித்தார்.
    ரெண்டுல எது அழகு...இப்படி மயங்க வைக்கிறியேம்மா மகிமா
    7/10
    சாட்டை படத்திற்கு பிறகு பள்ளி படிப்பை முடித்து விட்டு 4 தமிழ் படங்களில் நடித்தார் மகிமா. 2021 ம் ஆண்டு டொரன்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2021 ல் மகிமாவிற்கு மகாமுனி படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது வழங்கப்பட்டது. 
    ரெண்டுல எது அழகு...இப்படி மயங்க வைக்கிறியேம்மா மகிமா
    8/10
    இது தவிர Madrid சர்வதேச திரபை்பட விழாவிலும் சிறந்த துணை நடிகைக்கான விருதினை மகிமா பெற்றுள்ளார். பல சர்வதேச விருதுகளை பெற்றாலும் தமிழில் போதிய அளவில் பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனதும்.
    ரெண்டுல எது அழகு...இப்படி மயங்க வைக்கிறியேம்மா மகிமா
    9/10
    தமிழில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்படாததால் இவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். தனது ரசிகர்களுக்காக அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அழகான போட்டோக்களை மகிமா வெளியிட்டு வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X