twitter
    bredcrumb

    மீனாவின் கணவர் வித்தியாசாகர் மரணம்...திருமண வாழ்க்கையின் இனிய நினைவுகள்

    By Mohana Priya
    | Published: Wednesday, June 29, 2022, 08:10 [IST]
    மீனாவின் கணவர் வித்தியாசாகர் கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்பால் உயிரிழந்தார். மீனா – வித்தியாசாகரின் திருமண வாழ்க்கையின் இனிய நினைவுகளை இங்கே பார்க்கலாம்.
    மீனாவின் கணவர் வித்தியாசாகர் மரணம்...திருமண வாழ்க்கையின் இனிய நினைவுகள்
    1/10
    தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருக்கும் மீனா, பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரும், சாஃப்ட்வேர் இன்ஜினியருமான வித்தியாசாகரை திருமணம் செய்து கொண்டார். 2009 ம் ஆண்டு ஜுலை 12 ம் தேதி இவர்களின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
    மீனாவின் கணவர் வித்தியாசாகர் மரணம்...திருமண வாழ்க்கையின் இனிய நினைவுகள்
    2/10
    திருமணம் முடிந்ததும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய பிறகு சென்னையில் இவர்களின் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் கமல், விஜய் உள்ளிட்ட தென்னிந்திய திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
    மீனாவின் கணவர் வித்தியாசாகர் மரணம்...திருமண வாழ்க்கையின் இனிய நினைவுகள்
    3/10
    மீனா – வித்தியாசாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் 5 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த தெறி படத்தில் அறிமுகமானார். ஒரு படத்திலேயே தனது க்யூட்டான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விட்டார் நைனிகா.
    மீனாவின் கணவர் வித்தியாசாகர் மரணம்...திருமண வாழ்க்கையின் இனிய நினைவுகள்
    4/10
    எப்போது சிரித்த முகத்துடன் அழகாக வலம் வரும் மீனா அனைவரையும் கவர்ந்த நடிகை. ஜாலி டைப். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கூட, எங்கள் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்துள்ளது கொரோனா என அழகாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.
    மீனாவின் கணவர் வித்தியாசாகர் மரணம்...திருமண வாழ்க்கையின் இனிய நினைவுகள்
    5/10
    தனது கணவர் வித்தியாசாகர் மீது தீராத காதல் கொண்டிருந்தார் மீனா. திருமண வாழ்க்கையில் 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 13வது திருமண நாளை அடுத்த மாதம் சிறப்பாகக் கொண்டாட இவர்கள் திட்டமிட்டிருந்தனர். 
    மீனாவின் கணவர் வித்தியாசாகர் மரணம்...திருமண வாழ்க்கையின் இனிய நினைவுகள்
    6/10
    கடந்த ஆண்டு திருமண நாளன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தங்களின் திருமண போட்டோவை பதிவிட்டு, எனது வாழ்க்கையில் வானவில் போல் வந்தீர்கள். ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கலர்ஃபுல் ஆக்கி விட்டீர்கள் என தனது கணவர் பற்றி குறிப்பிட்டிருந்தார் மீனா.
    மீனாவின் கணவர் வித்தியாசாகர் மரணம்...திருமண வாழ்க்கையின் இனிய நினைவுகள்
    7/10
    திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் சினிமாவில் பிரேக் எடுத்துக் கொண்ட மீனா, மலையாளத்தில் த்ரிஷ்யம் படம் மூலமாகவே சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். அதற்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் பிஸியாகி விட்டார். குடும்பம், குழந்தைக்காக தான் சினிமாவில் பிரேக் எடுத்துக் கொண்டதாக மீனா கூறினார்.
    மீனாவின் கணவர் வித்தியாசாகர் மரணம்...திருமண வாழ்க்கையின் இனிய நினைவுகள்
    8/10
    சினிமாவில் நடிக்காமல் இருந்த போது திருமண வாழ்க்கை பற்றி  மீனாவிடம் பேட்டி ஒன்றில் கேட்ட போது, லைஃப் இப்பொழுதும் பிஸியாக தான் உள்ளது. அவர் ஐடி துறையில் உள்ளார். கணவர், குழந்தை, குழந்தைக்கு வேண்டியது என கவனித்துக் கொள்வதால் பிஸியாக இருக்கிறேன். சினியாவில் பார்ப்பதை போல் இல்லை. வாழ்க்கை ரொம்ப யதார்த்தமாக உள்ளது என்றார்.
    மீனாவின் கணவர் வித்தியாசாகர் மரணம்...திருமண வாழ்க்கையின் இனிய நினைவுகள்
    9/10
    இப்போது தான் திருமணமானது போல் உள்ளது. ஆனால் நாட்கள் கடகடவென ஓடி விட்டது. இப்போது குழந்தை இருக்கிறது. எல்லாமே வேகமாக நடந்து முடிந்து விட்டது என சந்தோஷமாக, சொல்வதற்கு வார்த்தையே இல்லாமல் தனது திருமண வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்டார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X